தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ கெடு இன்றுடன் நிறைவடைகிறது!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 20th November 2017 03:28 PM | Last Updated : 20th November 2017 03:28 PM | அ+அ அ- |

வாசகர்களுக்கு ஒரு அன்பான நினைவுறுத்தல்!
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது. போட்டிக்காக ஃபோட்டோக்கள் அனுப்புபவர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை அவகாசம் உண்டு. அதற்குள் எங்களை வந்தடையும் ஃபோட்டோக்கள் மற்றும் மின்னஞ்சல் கடிதங்களில் இருந்து சிறந்த 5 ஃபோட்டோக்களுடன் கூடிய மின்னஞ்சல்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும். பரிசு பெற்றவர்கள் குறித்த விவரங்கள் 24.11.17 வெள்ளியன்று தினமணி.காமில் வெளியிடப்படும். போட்டி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இன்று வரை தங்களது பள்ளி குரூப் ஃபோட்டோக்களையும் அது சார்ந்த அருமையான நினைவுகளையும் சிரத்தையோடும், குதூகலத்தோடும் எங்களுக்கு பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் பல!