தினமணி ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி - வாசகர்களுக்கான சிறு அறிவிப்பு & மீள் நினைவுறுத்தல்!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 14th November 2017 12:19 PM | Last Updated : 14th November 2017 12:19 PM | அ+அ அ- |

தினமணி ‘குரூப் ஃபோட்டோ’ போட்டிக்காக வாசகர்களிடமிருந்து வந்து குவியும் ஃபோட்டோக்களைக் காணும் போது சந்தோசமாக இருக்கிறது. இறுதித் தேதியாக 20.11.17 ஆம் நாளை அறிவித்திருந்தோம். அதற்குள் இன்னும் அதிக அளவில் குரூப் ஃபோட்டோக்கள் வரலாம். இருப்பினும் சில ஃபோட்டோக்களில் தகவல்கள் எதையும் குறிப்பிடாமல் வெறுமே ஃபோட்டோக்களை மட்டும் சில வாசகர்கள் அனுப்பி இருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியின் முகாந்திரமே, பழைய நட்புகளை பள்ளியில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோக்கள் வாயிலாக நினைவூட்டுவது மட்டுமல்ல, அப்போது நடந்த மறக்க முடியாத அழகான சம்பவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்தப் போட்டி அமையட்டும் என்பதாகத் தான்.
வாழ்க்கை ஒரே வாழ்க்கை!
அதில் குழந்தைப் பருவமும் ஒரே ஒரு முறை தான் வரும்!
அத்தகைய குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்களுக்கு வாழ்வில் என்றென்றைக்குமாய் நீங்கா நினைவுகளுடன் குதூகலமாய் நினைத்துப் பார்த்து ஏங்கத்தக்க ஏராளமான தருணங்கள் இருந்திருக்கலாம். அவற்றை அப்போது பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லாதாவர்கள் இப்போதேனும் தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ வாயிலாகத் தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே இந்தப் போட்டியின் நோக்கம். ஃபோட்டோ அனுப்பும் வாசகர்கள் எவராயினும், வெறுமே ஃபோட்டோ மட்டுமே அனுப்பாமல் ஃபோட்டோவில் இருப்பவர்களைப் பற்றிய சிறு அறிமுகம், மற்றும் அந்த ஃபோட்டோ எடுத்துக் கொண்ட தருணத்தில் தங்களுக்குள் உணர்ந்த சுவாரஸ்யங்கள் இரண்டையுமே குறிப்பிட மறக்கக் கூடாது.
குரூப் ஃபோட்டோ குறித்த அழகான அறிமுகம், அழகுத் தமிழில் ஃபோட்டோ குறித்த சுவாரஸ்யமான ஞாபகப் பகிர்வு இரண்டும் அமைந்த ஃபோட்டோக்களுக்கே வெற்றி வாய்ப்பு!
அதனால் ஃபோட்டோக்கள் அனுப்பும் வாசகர்கள் அதை கவனத்தில் கொண்டு ஃபோட்டோக்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அது மட்டுமல்ல, தினமணி போட்டி என்பதால் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள். ஆங்கிலக் குறிப்புகளோ, கடிதங்களோ வேண்டாம்.
இதுவரை வந்த குரூப் ஃபோட்டோக்களில் 45 வருடங்களுக்குப் பிறகு தனது பால்ய பள்ளி நண்பரைச் சந்தித்து பள்ளி குரூப் ஃபோட்டோவைப் பெற்று அதை எங்களுக்கு அனுப்பியிருந்தார் ஒரு வாசகர்; சில வாசகர்கள் இதற்காக பல நாட்கள் பேச்சுத் தொடர்பே இன்றி விடுபட்டிருந்த பல நண்பர்களைத் தேடி அடையாளம் கண்டு ஃபோட்டோக்கள் குறித்து சுவையான தகவல்களைப் பேசிச் சிலாகித்ததாக எழுதியிருந்தார்கள். அனைவருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள்! போட்டிக்கான நாள் நெருங்குகிறது. மேற்கொண்டு குரூப் ஃபோட்டோ போட்டியில் பங்குபெறும் வாசகர்கள் மேற்கண்ட அறிவுறுத்தலை நினைவில் கொண்டு மறவாமல் உங்களது ‘குரூப் ஃபோட்டோ’க்களை முழுமையான தகவல்கள் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்களைத் தமிழில் எழுதி அனுப்புங்கள்.
தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி- 2017 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dinamani.readers@gmail.com வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2017 |
நன்றி!
Image courtesy: MOHAMED YAKOOB, APPAR HIGH SCHOOL, KARUPPAAYURANI, MADURAI