ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் 'கிண்டில் லைட்' செயலி: அமேசான் அறிமுகம்!

இந்திய அளவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய 'கிண்டில் லைட்' செயலியை அமேசான் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் 'கிண்டில் லைட்' செயலி: அமேசான் அறிமுகம்!
Published on
Updated on
1 min read

நவீன டிஜிட்டல் உலகில் வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் விதமாக கிண்டில் எனும் செயலியின் வழியாக புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. இதில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் எளிய முறையிலும், குறைந்த விலையிலும் கிடைக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது வாசிப்பில் ஆர்வமுள்ள பலருக்கு, புத்தகங்களை பாதுகாக்கவேண்டிய கட்டாயமின்றி புதிய வசதியை ஏற்படுத்தியது. இதன்மூலம் தங்களுக்கு தேவையான புத்தகங்களை கிண்டிலில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியை ஏற்படுத்தியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்திய அளவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய 'கிண்டில் லைட்' செயலியை அமேசான் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் உலகளவிலேயே மிகவும் எளிமையான வாசிப்பு செயலியாகவும் இடம்பெற்றுள்ளது.

கிண்டில் லைட் செயலி வெறும் 2 மெகா பைட் அளவு மட்டுமே கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் மொபைல் ஃபோனில் அதகளவிலான இடவசதியை ஆக்கிரமிக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. இதில் தனிப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விஸ்பர்ஸிங்க் (ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய பலதரப்பட்ட உபகரணங்களிலும் சுலபமாக இயங்கும் வசதி), இலவச டிஜிட்டல் புத்தகங்களின் மாதிரி உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும். இவை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாள மொழிகளில் முதல்கட்டமாக அறிமுகமாகிறது.

இதுகுறித்து கிண்டில் இந்தியா மேலாளர் ராஜீவ் மேத்தா கூறுகையில்,

இந்திய அளவில் எங்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம். தற்போது எங்களின் முழுக் கவனமும் இந்தியாவில் தான் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் வாசிப்புத் தன்மையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மொபைல் ஃபோன்களில் உள்ள செயலிகள் அதிக இடவசதியை ஆக்கிரமித்துவிடும். ஆனால் கிண்டில் லைட்டில் இந்த பாதிப்பு இருக்காது. இருந்தாலும் எங்களின் தரத்திலும் குறைவிருக்காது. இதில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனவே தான் கிண்டில் லைட் செயலியை வெறும் 2 மெகா பைட் அளவில் தயாரித்துள்ளோம். இது 2ஜி மற்றும் 3ஜி நெட்வோர்க்கில் கூட சுலபமாக இயங்கும். இந்த செயலி அறிமுகமாக முதல் மாதத்தில் மட்டும் அமேசான் பே வழியாக பதிவிறக்கம் செய்யப்படும் புத்தகங்களுக்கு 80 சதவீத சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com