பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி தெரியும், அதென்ன பிங்க் புரட்சி, நீலப் புரட்சி, கோல்டன் புரட்சி?

இந்தியாவில் நீலப்புரட்சியின் தந்தை டாக்டர் ஹிரலால் செளத்ரி, நீலப்புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன்
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி தெரியும், அதென்ன பிங்க் புரட்சி, நீலப் புரட்சி, கோல்டன் புரட்சி?

இங்கே புரட்சி எனும் சொல் குறிப்பது அந்தந்த துறைகளில் நிகழ்ந்த அபிரிமிதமான வளர்ச்சிகளைத்தான். இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த சமீபத்தில் உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் எல்லாத் துறைகளிலும் ஒரு பற்றாக்குறையை நிலவுவதை உணர்ந்தனர். மக்கள் தொகை பெருகிக் கொண்டே செல்லச் செல்ல மக்களுக்குத் தேவையான அத்யாவசிய பொருட்களின் உற்பத்தி குறைந்து கொண்டே போனது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் உலகில் மனித இனமே அரிதாகி விடும் என்ற நோக்கில் பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் துணை கொண்டு மாபெரும் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளினால் இன்று உலக மக்களது குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் உணவு, உடை, உறவிட லிஸ்டில் முதலிரண்டும் பெருமளவில் பூர்த்தியாகி உள்ளன.

  • வெண்மை புரட்சி - பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் நிகழ்ந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்
  • பசுமை புரட்சி - விவசாயத்துறையில் உற்பத்தி சார்ந்து பெருகிய அபிரிமிதமான வளர்ச்சி
  • நீலப்புரட்சி - மீன் உற்பத்தி மற்றும் வியாபாரம் சார்ந்து நிகழ்த்தப்பட்ட முன்னேற்றங்கள்
  • பிரவுன் புரட்சி - தோல் மற்றும் கோகோ தொழில்துறை சார்ந்து நிகழ்ந்த புரட்சி
  • கரும் புரட்சி - பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்து நிகழ்ந்த புரட்சி
  • கோல்டன் புரட்சி - தேனீ வளர்ப்பு, பழ உற்பத்தி, மற்றும் தோட்டக் கலைத்துறையின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்த உற்பத்தி மற்றும் வளர்ச்சி சார்ந்த புரட்சி
  • பிங்க் புரட்சி - வெங்காய சாகுபடி மற்றும் இரால் உற்பத்தியில் நிகழ்ந்த புரட்சி
  • வெள்ளிப் புரட்சி - முட்டை உற்பத்தி மற்றும் அதன் வியாபார வாய்ப்புகளில் நிகழ்ந்த முன்னேற்றம்
  • சிவப்புப் புரட்சி - மாமிசம் மற்றும் தக்காளி உற்பத்தியில் தோன்றிய அபிரிமிதமான முன்னேற்றம்
  • கிரே புரட்சி - உரம் மற்றும் உரப்பொருட்களின் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்த புரட்சி
  • ரவுண்டு புரட்சி - உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் அதற்கான விற்பனை வாய்ப்புகள் சார்ந்து நிகழ்ந்த புரட்சி
  • மஞ்சள் புரட்சி -எண்ணெய்வித்துகளின் உற்பத்தி மற்றும் அபிரிமிதமான வளர்ச்சி சார்ந்து நிகழ்ந்த புரட்சி
  • கோல்டன் ஃபைபர் புரட்சி - சணல் உற்பத்தியில் நிகழ்ந்த திடீர் முன்னேற்றம்
  • சில்வர் ஃபைபர் புரட்சி - பருத்தி சாகுபடி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறைகளின் முன்னேற்றத்தில் நிகழ்ந்த புரட்சி

இங்கே புரட்சி எனும் சொல் குறிப்பது அந்தந்த துறைகளில் நிகழ்ந்த அபிரிமிதமான வளர்ச்சிகளைத்தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் முழுவதிலும் அனைத்துத் துறைகளிலும் எல்லையற்ற பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் உண்பதற்கு உணவின்றி பசியாலும், பட்டினியாலும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்து கொண்டிருந்தனர். அதைப் போக்க வந்தது தான் பசுமைப் புரட்சி. பசுமைப் புரட்சியை உலகளாவிய முறையில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் நார்மன் போர்லாக் எனினும் இந்தியாவில் நாம் இந்தியர்களுக்கான பசுமைப் புரட்சியின் தந்தை எனக் கொண்டாடுவது பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனைத்த்தான். அவரே இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எனப்படுகிறார்.

அதே போல இந்தியாவில் நீலப்புரட்சியின் தந்தை டாக்டர் ஹிரலால் செளத்ரி

நீலப்புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com