போலிச் செய்தியைப் பரப்பியதற்காக இணையதளச் செய்தி ஆசிரியர் கைது!

போலிச் செய்தியைப் பரப்பியதற்காக இணையதளச் செய்தி ஆசிரியர் கைது!

ஜெயின் துறவிக்கு விபத்து நேர்ந்தது. அதற்கு காரணம் குடித்து விட்டு பைக் ஓட்டிய முஸ்லிம் இளைஞர் தான் என மகேஷ் ஹெக்டே தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார்.
Published on

கர்நாடகாவை மையமாகக் கொண்டு வெளிவரும் ‘போஸ்ட் கார்டு நியூஸ்’ எனும் இணையதள செய்திச் சேவையின் ஆசிரியர் போலிச்செய்தியைப் பரப்பிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். போஸ்ட் கார்டு நியூஸின் ஆசிரியரான மகேஷ் ஹெக்டே மார்ச் 19 ஆம் தேதியன்று கர்நாடகாவில் ஜெயின் துறவியொருவருக்கு நேர்ந்த விபத்து குறித்து விஷமத்தனமாக ட்விட்டர் பதிவிட்டதின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதியன்று  உபாத்யாயா மயன்க் சாகர் ஜி மகராஜ் எனும் ஜெயின் துறவிக்கு விபத்து நேர்ந்தது. அதற்கு காரணம் குடித்து விட்டு பைக் ஓட்டிய முஸ்லிம் இளைஞர் தான் என மகேஷ் ஹெக்டே தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டர் பதிவு தொடர்ந்து பலரால் உடனுக்குடனாக பகிரப்பட்டு சென்சேஷனல் செய்தியாக ஆக்கப்பட்டது. மகேஷ் ஹெக்டேவை ட்விட்டரில் பின்பற்றும் நண்பர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடியும் ஒருவர். அதோடு மகேஷ் ஹெக்டேவின் ட்விட்டர் பதிவு மாநிலத்தில் மதவெறியைத் தூண்டும் விதமாக இருந்ததால் இந்தக் கைது நேர்ந்திருக்கிறது என்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com