பிரதமரை வரவேற்க ஒற்றைப் பூவா? பூங்கொத்துக்கு பெறுமானமானவர் இல்லையா மோடி!

ஒரு பூங்கொத்தின் ஆயுள் வெகு குறைவு. நீங்கள் எனக்கொரு பூங்கொத்தைப் பரிசளித்து வரவேற்கிறீர்கள் என்றால், அது வெகு விரைவில் குப்பைக் கூடைக்கு சென்று விடும். அதே சமயம் நீங்கள் எனக்கு ஒரு கதர் கைக்குட்டையை
பிரதமரை வரவேற்க ஒற்றைப் பூவா? பூங்கொத்துக்கு பெறுமானமானவர் இல்லையா மோடி!

சமீபத்தில் சட்டீஷ்கர் மாநிலத்துக்குச் சென்றிருந்தார் மோடி. அவரை வரவேற்க அந்த மாநில முதல்வரும் மற்றும் சில அரசியல் தலைவர்களும் திரண்டிருந்தனர். அப்போது பிரதமரை வரவேற்க வந்த சட்டீஷ்கர் முதல்வரின் கையில் இருந்த ஒற்றை மலரைக் கண்டு பலரும் புருவம் உயர்த்தினர். அட! பாரதப் பிரதமரை வரவேற்க இவருக்கு ஒற்றைப் பூ தான் கிடைத்ததா? ஒரு மலர்க்கொத்துக்கு கூட மோடி பெறுமானமானவர் இல்லையா? என்று கேள்விகள் எழுந்தன. சட்டீஷ்கரின் பீஜப்பூரில் இருந்து மோடி திரும்பிச் சென்றபின்னும் இந்தப் பேச்சு அங்கே ஓயவில்லை. காரணம் அந்த மக்கள் பிரதமர் மோடி தனது மான்கி பாத் வானொலி உரையாடலில் அறிவித்திருந்த ஒரு முக்கியமான வேண்டுகோளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதே. பிரதமர் மோடி தனது மான் கி பாத் உரையில் அப்படி என்ன வேண்டுகோள் விடுத்திருந்தார்? 

ஒரு பூங்கொத்தின் ஆயுள் வெகு குறைவு. நீங்கள் எனக்கொரு பூங்கொத்தைப் பரிசளித்து வரவேற்கிறீர்கள் என்றால், அது வெகு விரைவில் குப்பைக் கூடைக்கு சென்று விடும். அதே சமயம் நீங்கள் எனக்கு ஒரு கதர் கைக்குட்டையையோ, புத்தகத்தையோ பரிசளித்தீர்கள் என்றால் அது எனக்கு நீண்ட நாட்கள் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே இனிமேல் என்னை வரவேற்பவர்களும், பரிசளிக்க நினைப்பவர்களும் பூங்கொத்துக்கள் அளித்து வீணாக்குவதற்கு பதிலாக ஒற்றை மலரையோ அல்லது கதர் கைக்குட்டைகள், புத்தககங்களையோ அளித்தால் மகிழ்வேன் என்று கூறியிருந்தார். பிரதமரின் வேண்டுகோளின்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பிரதமரை வரவேற்க மலர்க்கொத்துகளை பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது. அதன் விளைவு தான் சட்டீஷ்கர் முதல்வர் ஒற்றைப் பூ அளித்து பிரதமரை வரவேற்றதன் பின்னணி.

மோடியை எதற்குப் பாராட்டுகிறோமோ இல்லையோ இப்படியான ஐடியாக்களுக்காக நிச்சயம் பாராட்டலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com