பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்காக உணவுப் பாதுகாப்புக் கழகம் (FSSAI) வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள்!

பாக்கெட் செய்யப்பட்ட 100 கிராம் அல்லது 1-- மில்லி உணவுப் பொருட்களில் 10 சதவிகிதத்துக்கும் மேல் சர்க்கரை பயன்படுத்தப்பட்டிருப்பின் அந்தச் அதீதச் சர்க்கரை அளவைக் குறிக்கும் சிவப்பு நிறக்குறியீடு
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்காக உணவுப் பாதுகாப்புக் கழகம் (FSSAI) வெளியிட்டுள்ள புதிய நெறிமுறைகள்!

குறைந்தபட்சம் 5% உணவுப் பொருள்களை மரபணு பொறியியல் முறையில் ஆதாரமாகக் கொண்டிருக்கும் அனைத்து உணவுப் பொருட்களின் மீதும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு குறித்த சதவிகித விகிதங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட வேண்டும். சர்க்கரை மற்றும் கொழுப்பு விதிகளை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) வரைவு விதிகளின் படி, அவை எந்த அளவிற்கு குறிப்பிடுகின்றன என்பதை குறிப்பிடும் 'சிவப்பு' மற்றும் 'பச்சை' அடையாளங்கள் ஆகியவற்றை அவை அடைப்பட்ட பாக்கெட்டின் வெளிப்புறத்தில் கொண்டிருக்க வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட உணவை அடையாளப்படுத்தும் விஷயத்தில் ஒரு வழிகாட்டும் முயற்சியாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு மையம் எடுத்த முதல் நடவடிக்கையாக இது அமைகிறது. இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் கருத்துக்களுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். "இது இறுதி வரைவு அல்ல. இதில் இன்னும் மாற்றங்கள் சேர்க்கப்படவிருக்கின்றன... மேலும் ஒரு பதிப்பு இருக்கும், அது 30 நாட்களுக்கு மதிப்பாய்வு செய்யப்படும், என "FSSAI இன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் அகர்வால் கூறினார்.

மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான நெறிமுறைகள் பற்றிய ஆய்வை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவுப் பாதுகாப்புக் கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆயினும், தற்போதைய சட்டங்கள், எந்த மரபணு மாற்றப்பட்ட உணவையும் தடைசெய்வதாகவே இருந்தாலும், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால், ஒரு யூனியன் சூழல் அமைச்சகத்தின் கீழ் அப்பொருளுக்கான விற்பனைத் தடைஇருந்தால் மட்டுமே இந்தியாவில் அதை விற்பனை செய்யும் உரிமையைத் தடுப்பதாக இருக்கிறது. 2007 ஆம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை மூலம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மரபணு மாற்றப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் அபிரிமிதமான கொழுப்பு மற்றும் சர்க்கரை மூலக்கூறுகள் குறித்து சம்மந்தப்பட்ட உணவு நிறுவனங்களே முதலில் தெளிவான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை உணவுப் பாதுகாப்புக் கழகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும். அதன் பின்னர் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகமும் அதே ஆய்வை மீண்டுமொருமுறை மேற்கொண்டு அவற்றின் நன்மை, தீமைகளை, பாதிப்புகளை உறுதி செய்யும் எனவும் FSSAI தலைமை நிர்வாக அதிகாரி பவன் அகர்வால் கூறியிருந்தார். ஆனாலும், அப்போது இந்த கட்டுப்பாட்டிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மட்டும் நீதிமன்றங்களில் விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும் 2007 ஆம் ஆண்டு அறிக்கையானது,  பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ளிட்ட பொருட்களின் பாதுகாப்பான அளவுகளையும் வரையறுக்கிறது. பாக்கெட் செய்யப்பட்ட 100 கிராம் அல்லது 1-- மில்லி உணவுப் பொருட்களில் 10 சதவிகிதத்துக்கும் மேல் சர்க்கரை பயன்படுத்தப்பட்டிருப்பின் அந்தச் அதீதச் சர்க்கரை அளவைக் குறிக்கும் சிவப்பு நிறக்குறியீடு அந்த உணவுப் பாக்கெட்டுகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதன்மூலம் நுகர்வோர் பதப்படுத்தப் பட்டு பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கலந்துள்ள அதிகச் சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவைத் தெரிந்து கொண்டு அந்த உணவை உண்பதா, வேண்டாமா எனத்தீர்மானம் செய்ய முடியும். என்றும் அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com