சாதி வெறியைத் தூண்டும் விதமான வாட்ஸ் அப் குழுமங்களை நடத்தி வந்த 6 பேர் கைது!
By RKV | Published On : 14th May 2018 11:12 AM | Last Updated : 14th May 2018 11:12 AM | அ+அ அ- |

மேற்கு உத்தரப் பிரதேசம், மீரட் பகுதியில் சாதி துவேஷத்தை தூண்டும் விதமாக வெறுக்கத்தக்க வகையிலான தகவல்களை வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து வந்த 6 தலித் இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் உள்ளூர் குற்றப்புலபாய்வுத்துறை மூலமாகக் கண்டறிந்து கைது செய்துள்ளனர். இந்த 6 இளைஞர்களும் சுமார் 20 க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுமங்களைத் தொடங்கி அவற்றின் மூலமாக அப்பகுதி மக்களிடையே சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டத்தக்க விதத்திலான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வந்திருக்கின்றனர். என உத்தரப் பிரதேச ஏ.டி.ஜி.பி பிரஷாந்த் குமார் ஞாயிறன்று பத்திரிகையாளர்களிடையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.