தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்!

மேட்டுப்பாளையத்தில் தொடங்கி உதகமண்டலத்தில் முடியும் இந்த பயணத்திற்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய். இத்தனை கட்டணம் கொடுத்து தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சுற்றுலாத் திட்டத்தில் பதிவு செய்து
தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்!

இந்தியாவின் தென்னக ரயில்வே நீலகிரி மலைச்சுற்றுலா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி செல்லும் வகையில் புதிய சார்ட்டர் ட்ரெயின்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருவழிப் பயணத்திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த ரயில் சுற்றுலா திட்டத்தின் கீழ் நீலகிரி மலையில் ஹனிமூன் கொண்டாட விரும்பும் இளம் தம்பதிகள் தங்களுக்கே தங்களுக்கென தனியாக இந்த ட்ரெய்னை தென்னக ரயில்வே இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒருவழிப் பயணமாக அமையும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்பவர்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி வரை பயணிக்க முடியும்.

தென்னக ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய திட்டத்தின் கீழ் முதன்முறையாக தங்களது ஹனிமூனை நீலகிரி மலையில் கொண்டாட இந்த ஸ்பெஷல் ட்ரெய்னை புக் செய்தனர் கிரஹாம் வில்லியம் லின் (30) மற்றும் சில்வியா பிளாசிக் (27) எனும் வெளிநாட்டுப் புதுமணத் தம்பதியினர். தங்களது ஹனிமூனை மறக்க முடியாத இனிமையான நன்னாளாக மாற்ற விரும்பி இத்தம்பதியினர் தங்களது ஹனிமூன் கொண்டாட்டத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் தொடங்கி உதகமண்டலத்தில் முடியும் இந்த பயணத்திற்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய். இத்தனை கட்டணம் கொடுத்து தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சுற்றுலாத் திட்டத்தில் பதிவு செய்து ஹனிமூன் கொண்டாட நினைத்த அவர்களது முயற்சியைக் கெளரவிக்கும் விதத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் இத்தம்பதியினருக்கு கடந்த வெள்ளியன்று பிரமாண்ட வரவேற்பளித்து அசத்தியுள்ளனர்.

ஹனிமூன் தம்பதியினரை ஏற்றிக் கொண்ட ஸ்பெஷல் ட்ரெய்ன் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணியளவில் கிளம்பி பிற்பகல் 2.40 மணிக்கு ஊட்டி சென்றடைந்தது.

நீலகிரி மலைச்சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 120 இருக்கைகளுடன் தென்னக ரயில்வேயின் சேலம் டிவிஷனில் இந்த ஸ்பெஷல் ட்ரெய்ன் இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com