சிங்கப்பூர் - மதுரை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சிக்கன சேவை!

இந்த புதிய சேவை மூலமாக இனி மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் பயணிகள் நேரடியாக குறைந்த நேரத்தில் சென்று வரலாம். இதன் சிறப்பம்சம் தினசரி... இடையில் எங்கும் 
சிங்கப்பூர் - மதுரை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சிக்கன சேவை!
Published on
Updated on
2 min read

இதோ சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சீர்மிகு சேவை தமிழர்களையும் தாய் தமிழகத்தையும் இணைக்கும் மற்றொரு உறவுப்பாலம்!

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சேவை!

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் இடையே தினசரி நிறுத்தமில்லா மலிவுக் கட்டண விமானப் போக்குவரத்து ஆகஸ்ட் 16 முதல் அறிமுகம்!

இனியென்ன கவலை? நினைத்த மாத்திரத்தில்... உங்கள் மனம் கவர்ந்த பெருமைமிகு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே குதூகலமாக சென்று வரலாம். ஹனிமூன் ட்ரிப்பா, பிஸினஸ் டூரா எதுவானாலும் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே இந்த விமான சேவையின் பிரதான நோக்கமாகும்.

இந்தியாவின் முதல் குறைந்த கட்டண சர்வதேச விமான சேவையைத் தொடங்கிய நிறுவனம் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ். ஏர்-இந்தியா எக்ஸ்பிரசில் பயணம் செய்வதே மிகப் பெருமையான விஷயம்.

நாடு முழுவதும் 30 நகரங்களுக்கு வாரந்தோறும் 583 விமான சேவைகளை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்குகிறது. கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, விஜயவாடா, மும்பை, புணே, அமிர்தசரஸ், லக்னௌ, ஜெய்ப்பூர், வாரணசி, புதுதில்லி, சண்டீகர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ், இப்போது அறிமுகப்படுத்தியுள்ள சேவை மூலம் இனி மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் பயணிகள் நேரடியாக குறைந்த நேரத்தில் சென்று வரலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தினசரி... இடையில் எங்குமே நிறுத்தமற்ற விமான சேவை இது என்பதே!. உங்கள் பயணத்தை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

உங்களுக்கு கூடுதல் பொருட்கள் தேவை இருந்தால் அதை நீங்கள் பயணச்சீட்டை வாங்கும்போதே ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ‘மை புக்கிங்’ மூலம் தேவையான மாறுதல்களைச் செய்து உங்களுக்கான இலவச அளவு பொருட்களுடன் கூடுதல் பொருட்களையும் கொண்டு செல்லலாம்.

5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் இந்தக் கூடுதல் பொருட்களின் தேவையைப் பற்றி பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் விமான நிலையத்தில் தாமதமின்றி செல்ல ஏதுவாகிறது. கூடுதல் பொருட்கள் கொண்டு செல்வதற்கான அனுமதியை எங்களது நகர அலுவலகங்களிலோ அல்லது 24 மணிநேர தொடர்பு மையத்திலோ பெறலாம். 
  
ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இருக்கை தேர்வு வசதியின் மூலமாக உங்களின் விருப்பமான இருக்கையை தேர்வு செய்து கொள்ளலாம்.

இயன்றவரை உங்களது இருக்கை தேர்வை விரைவில் தேர்வு செய்துவிடுவது நல்லது. விமானம் கிளம்புவதற்கு முன்பு நீங்கள் விரும்பும் இருக்கை கிடைக்காமல் போவதை இதன்மூலம் தவிர்த்து விடலாம்.

கால்களை நீட்டிக் கொள்ளும் வசதி, ஜன்னலோர இருக்கை போன்ற விருப்பத்தேர்வை முன்கூட்டியே பதிவு செய்வதன் மூலம் எளிதில் பெற முடியும். விமானம் கிளம்புவதற்கு 12 நேரத்துக்கு முன்பாக இருக்கையை தேர்வு செய்யலாம். இதற்காக எங்களது அலுவலகங்களையோ அல்லது 24 மணிநேர தொடர்பு சேவை மையத்தையோ அணுகலாம்.

விமானத்தில் உங்களுக்கு விருப்பமான சுவையான காலை, மாலை, இரவு சைவ, அசைவ உணவு வகைகளை மெனுவில் இருந்து தேர்வு செய்யலாம். இதையும் 24 மணிநேரத்துக்கு முன்பாக பதிவு செய்யலாம்.

இத்தனை தரமான சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com