விலங்குகளுக்கும் ஏற்படும் மன அழுத்தம்!

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளும் மன அழுத்தத்தை உணர்கின்றன என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.
விலங்குகளுக்கும் ஏற்படும் மன அழுத்தம்!

மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளும் மன அழுத்தத்தை உணர்கின்றன என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.

வேலை மற்றும் சமூக அழுத்தம் காரணமாக மன அழுத்தம் ஏற்படும் என்று நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள். காரணம் உங்கள் குடும்பத்துடன் வார இறுதியில் நீங்கள் உயிரியல் பூங்காவிற்கு ஜீப்பில் பயணித்து விலங்குகளைப் பார்வையிடும்போது, உங்களை அறியாமேலே அந்த விலங்குகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்கிறது இந்த ஆய்வு.

நாட்டில் முதன்முறையாக, பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில், கால்நடை மருத்துவர்கள் உயிரியல் பூங்காவிலுள்ள விலங்குகளிடையே உள்ள மன அழுத்த அளவை அவர்களது கார்டிசோலைப் ஆய்ந்து கணக்கிடுவதன் மூலம் மதிப்பிட்டனர். இந்தப் பரிசோதனை, 10 நாட்களில் நடத்தி விலங்குகளின் மன அழுத்தத்தின் அளவைக் கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்தனர்.

இந்த ஆராய்ச்சியில் புலிகள், வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிங்கங்கள் மற்றும் வால் கொண்ட மக்காக்கள் போன்றவற்றின் மலத்தை சேகரித்தனர்.  ஞாயிறு (உயிரியல் பூங்காவில் மனிதர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் போது), செவ்வாய் (மிருகக்காட்சி சாலையை மூடும்போது) மற்றும் ஒரு வார நாள் (கூட்டம் சாதாரணமாக இருக்கும் போது) என இந்த மாதிரிகள் வாரத்தில் மூன்று முறை சேகரிக்கப்பட்டன. கார்டிசோல் என்பது இந்த மிருகங்களின் அட்ரீனல் கோர்டெக்ஸில் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதமாகும். கர்ப்ப காலம், காலநிலை வெப்பநிலையில் மாற்றம், உணவு, பாலூட்டுதல், பார்வையாளர்களால் சூழப்பட்டிருக்கும் போது மற்றும் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கும் போது  அதன் விறைப்பு நிலை வேறுபடுகிறது.

இந்த மாதிரிகள் ஆய்வு மையத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆனால் உயிரியல் பூங்காவிலுள்ள புலிகளைப் பொருத்தவரையில், பன்னேர்கட்டா தேசிய பூங்காவின் காடுகளில் சுற்றித் திரிந்த தனிகாட்டுப் புலிகளின் மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டது.

கர்நாடகத்தின் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னர், இந்த உயிரியல் பூங்காவில் முதல் முறையாக இத்தகைய ஆய்வு செய்யப்பட்டது என்று பூங்கா நிர்வாக இயக்குநர் வாணிஷ்ரி விபின் சிங் கூறினார். இருப்பினும், எந்தவொரு ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும் மிருகங்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை. "இது உள் பகுப்பாய்விற்கான விரிவான விஞ்ஞான ஆய்வாகும். விலங்குகளை நன்கு புரிந்து கொள்வதற்கும், அவற்றை மகிழ்ச்சியாக வைத்திருக்க சிறந்த மேலாண்மை நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டாய்வதற்கும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது," என்று அவர் கூறினார்.

முன்னதாக, மைசூரு தசரா யானைகள் குறித்து ஹைதராபாத்திலுள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தினரால் இதே போன்று விலங்குகளுக்கான மன அழுத்தச் சோதனை செய்யப்பட்டது. இந்தத் தரவு காடுகளில் தனியாகத் திரிந்த காட்டு யானைகளுடன் ஒப்பிடப்பட்டது.

"மத்திய உயிரியல் பூங்கா ஆணையகத்தில் (CZA) சில வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.  உயிரியல் பூங்காவில் சரியான விசாலமான இடங்களைப் பராமரிக்க வேண்டும், அப்படி இல்லாமல் அடைப்பட்ட இடங்களில் மிருகங்களை வைத்திருப்பது, சஃபாரி பகுதியில் வாகனங்களின் இயக்கம் மற்றும் உயிரியல் பூங்காவிலுள்ள சாலையில் மனிதர்கள் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் விலங்குகளிடையே மன அழுத்தம் ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தச் சோதனையின் மூலம் விலங்குகளை எவ்வாறு மகிழ்விப்பது, அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். விலங்குகளுக்கு சரியான உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கிறது, ஆனால் அவை எதாவது காரணத்தால் இடம்பெயர்ந்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. விலங்குகள் படிப்படியாகத் தங்களை சரி செய்கின்றன, ஆனால் மனிதர்களின் தொடர் இருப்பு அவற்றுக்கு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மனித-விலங்கு மோதலின் வெறொரு வடிவம் இது ’ என்று உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com