/
- எலுமிச்சை சில துளி தேவைப்படும்போது முழுப் பழத்தையும் அரிந்து வீணாக்காமல் சிறிய துளையிட்டுத் தேவையான அளவு சாறுபிழிந்து கொள்ளலாம்.
- காபி மேக்கரைத் கழுவும் போது நீருடன் எலுமிச்சைச்சாறு அல்லது வினிகரை விட்டு பின்பு ஸ்விட்சை ஆன் செய்யுங்கள் போதும். படுசுத்தமாகிவிடும்.
- கண்ணாடிப் பாத்திரங்களின் அடியில் கறைகள் இருந்தால் சில சொட்டு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு தண்ணீர் கலந்து குலுக்கினால் கறைகள் நீங்கிவிடும்.
- தோசைக் கல், வாணலி இவைகளில் எண்ணெய் பிசுபிசுவென்று பிடித்திருக்கும். சூட்டுடன் இருக்கும் போதே சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.
- தோலால் செய்யப்பட்ட சூட்கேஸை உபயோகிக்காமல் வைத்திருந்தால் அதனுள்ளே பூச்சி வரும். உபயோகமில்லாத சூட்கேஸில் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைக்கவும். பூச்சி வராது. நாற்றமும் வராது.
- ரப்பர் பேண்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்ளாது.
- மிளகாய்த் தூள், கோதுமை மாவு போன்றவை மிஷினில் அரைத்தவுடன் சூடாக இருக்கும். இதனால் வீட்டிற்கு வந்ததும் காகிதத்தில் கொட்டிப் பரப்பி ஆறச் செய்து, பிறகு, டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.
- சமையல் செய்யும் போது மேலே எண்ணெய் தெறித்து சுட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக் கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது, கொப்பளிக்காது.
- புது துடைப்பம் வாங்கியதும், அதை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
- அமுதா சரவணன், அம்பத்தூர்.
- வாழை இலையைப் பின்பக்கம் தணலில் சிறிது காட்டி, பிறகு பார்சலில் கட்டினால் கிழியாது.
- கீரையை மசிக்கும் போது அதனுடன் உருளைக் கிழங்கு ஒன்றை தோல் சீவி, சிறு துண்டுகளாக வேக விட்டு மசித்தால் ருசியாக இருக்கும்.
- ரவா லட்டு பிடிக்கும்போது சிறிது ரோஸ் எஸன்ஸ் விட்டுச் செய்தால் மணமும் சுவையும் கூடும்.
- தோசை சூடும்போது கல்லில் மாவை ஊற்றி விட்டு, மேல் பகுதியில் தேங்காயைத் துருவி தூவினால் தோசை சூப்பராக இருக்கும்.
- பிரட்டில் தடவ ஜாம் இல்லாவிட்டால், நெய் தடவி, அதன் மீது கொஞ்சம் தேனைத் தடவினால் சூப்பராக இருக்கும்.
- கொஞ்சம் அரிசி, கொஞ்சம் உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொண்டால், திடீர் என்று விருந்தினர் வந்து விட்டால் அதைக் கரைத்து திடீர் தோசை சுட்டு அசத்தலாம்.
- பழைய சாதத்தை வெள்ளைத் துணியில் கட்டி, இட்லி தட்டில் வைத்து சூடு படுத்தினால் சாதம் உதிர் உதிராக புதிதாக வடித்த சாதம் போல் இருக்கும்.
- வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது எலுமிச்சைச்சாறு விட்டு வதக்கினால் மொறு மொறுப்புடன் இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


