சுடச்சுட

  
  education_for_sale

   

  சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகமொன்று, தங்கள் பள்ளியில் பயின்ற 3 வயதுச் சிறுமியை எல் கே ஜி தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக அறிவித்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. மாணவி அப்பள்ளியில் எல் கே ஜி பயில 65,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்தார். சிறுமியின் தந்தை ‘சட்டப் பஞ்சாயத்து’ இயக்கத்தின் துணையுடன் அளித்த புகாரின் கீழ் இவ்விவகாரம் இன்று  ஊடக வெளிச்சம் கண்டுள்ளது.

  பள்ளி நிர்வாகம் சிறுமியை, தேர்வில் தோல்வி அடைந்தவர் என்று அறிவித்ததோடு மீண்டும் அதே பள்ளியில் அதே வகுப்பில் அவரைத் தொடரச் செய்யவும் சிறுமியின் பெற்றோரை வற்புறுத்தியதாகத் தகவல். சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை டி.சி வாங்கிக் கொண்டு வேறொரு பள்ளியில் சேர்க்க முயலும் போது, வேண்டாம் இங்கேயே மீண்டும் எல் கே ஜிக்கான கட்டணத்தைச் செலுத்தி எங்கள் பள்ளியிலேயே படிப்பைத் தொடரச் செய்யுங்கள் என்று அவர்கள் வற்புறுத்தியதாக சிறுமியின் தந்தை பேட்டியளித்துள்ளார். இவ்விஷயம் சிறுமியின் பெற்றோர் சார்பாக ‘சட்டப் பஞ்சாயத்து’ அமைப்பின் துணையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குப் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.

  சிறுமியின் தந்தை செய்தியாளரிடம் பேசுகையில்,  குறிப்பிட்ட பள்ளியில் கல்வி சேவையாகக் கருதப்படாமல் வியாபாரமாகி விட்ட அவலத்தையே தனது மகளுக்கு நேர்ந்த நிலை காட்டுகிறது. எல் கேஜி வகுப்பில் 3 வயதுச் சிறுமி ஃபெயில் ஆக்கப்படுவதும் மீண்டும் அதே வகுப்பை கட்டணம் செலுத்திப் படிக்கச் செய்ய முயல்வதும் ஒருவகை வியாபாரமாகி விட்டது. இந்த நிலை தொடரக்கூடாது. இது நிச்சயம் கண்டிக்கத் தக்கது. நாங்கள் கல்வி அமைச்சரிடம் இது குறித்துப் புகார் அளித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai