மோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’!

இந்தியப் பிரதமர் மோடி கூட தமது ட்விட்டர் தளத்தில் அந்தப் புகைப்படங்களில் ஒன்றைப் பதிந்து, ‘Majestic Gir Lion, Lovely picture”. என்று பாராட்டி இருந்தார். அந்தப் புகைப்படத்தை எடுத்தது அதே விலங்குகள் சரண
மோடியை மயக்கிய ‘கிர்னார் சிங்கம்’!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருக்கும் கிர் காடுகள் ஆசிய சிங்கங்களுக்காகப் பிரசித்தி பெற்றவை. ஆசியாக் கண்டத்தில் இப்போதும் ஆசிய வகைச் சிங்கங்கள் கணிசமாக வாழ்வது இந்தக் கானுயிர் புகலிடங்களில் மட்டுமே. ஆரம்பத்தில் கிர் மற்றும் கிர்னார் காடுகள் இரண்டுமே இணைந்து மிகப்பெரிய வனப்பகுதியாக அந்த வனவிலங்கு சரணாலயம் விளங்கியிருக்கிறது. ஆனால், காலங்கள் செல்லச் செல்ல தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் பெருகி நகரமயமாக்கல் அதிகரிக்க அதிகரிக்க கிர் காடுகளில் இருந்து பிரிந்து கிர்னார் தனித்த சிறு காட்டுப் பகுதியாக மாறிப்போனது. சுமார் 178.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிர்னார் காடுகள் சமீபத்தில் அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் காரணமாக உலகம் முழுதும் வைரலானது. 

இந்தியப் பிரதமர் மோடி கூட தமது ட்விட்டர் தளத்தில் அந்தப் புகைப்படங்களில் ஒன்றைப் பதிந்து, ‘Majestic Gir Lion, Lovely picture”. என்று பாராட்டி இருந்தார். அந்தப் புகைப்படத்தை எடுத்தது அதே விலங்குகள் சரணாலயத்தில் காவல் அதிகாரியாகப் பணியாற்றும் 28 வயது தீபக் வதேர்.

தீபக் வதேர் ஒரு சின்சியர் ஃபாரஸ்ட் கார்டு. அவர் தினமும் கண்காணிப்புப் பணிக்காக கிர்னார் வனப்பகுதியில் ரோந்து செல்லும் போது கையோடு தன் கேமராவையும், ஸ்மார்ட் ஃபோனையும் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வப்போது வனவிலங்குகளின் அரிதான தோற்றங்களைக் காண நேர்ந்தால் உடனடியாக அவற்றை புகைப்படங்களாகச் சுட்டுத் தள்ள தீபக் மறப்பதில்லை. அப்படியொரு சந்தர்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது அவருக்கு பிரதமர் மற்றும் உயரதிகாரிகள் வரையிலும் பாராட்டுப் பெற்றுத் தந்துள்ளது.

மார்ச் 5 ஆம் தேதி வழக்கம் போல தீபக் வதேர் தனது கானுலாவுக்குச் சென்று திரும்புகையில் குறிப்பிட்ட இந்த மரத்தடியில் ஆண் சிங்கம் ஒன்று மரத்தில் ஏற முயற்சி செய்து கொண்டே இருந்திருக்கிறது. பலமுறை அந்தக் காட்டில் இருக்கும் சிங்கங்களில் பல குறிப்பிட்ட அந்த மரத்தில் ஏற முயற்சி செய்வது அங்கு வாடிக்கை தான். அம்மாதிரியான நேரங்களில் எல்லாம் நான் அந்தத் தருணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்ய மறப்பதில்லை. ஆனால் இன்று ஒரு ஒற்றை ஆண் சிங்கம் மரத்தில் ஏற முயன்று கிட்டத்தட்ட ஏறி அமர்ந்த நிலையில் என் கண்ணில் பட்டது. நான் உடனடியாக அதை எனது மொபைல் கேமராவில் பதிவு செய்து என் உயரதிகாரிகள் மற்றும் நண்பர்களுக்கு அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்தேன். ‘flame of the forests’ என்று சொல்லப்படக் கூடிய அந்த மரத்தின் மேல் சிங்கம் நின்று கொண்டிருக்கும் காட்சி மிக அற்புதமாகப் பதிவாகி இருந்தது. சிங்கம் காட்டுக்கு ராஜா என்பதை மீண்டும் நிரூபிப்பதைப் போல் இருக்கிறது அந்தப் புகைப்படம். என்கிறார் தீபக் வதேர்.

இந்தியாவில் கிர் காடுகளில் மட்டும் மொத்தம் 523 ஆசியப் புலிகள் வசிக்கின்றன. அந்த 523 ல் 33 சிங்கங்கள் கிர்னார் காடுகளைச் சேர்ந்தவை என்கிறார் கிர்னார் வனச்சரக உயரதிகாரியான சுனில் குமார் பேர்வல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com