சுடச்சுட

  
  swathi_naidu

   

  டோலிவுட்டைப் பொருத்தவரை கடந்தாண்டு முழுவதும் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது ஸ்ரீரெட்டி விவகாரமே! இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத் துவக்கத்தில் வைரல் ஆன செய்தி என்ன தெரியுமா? அது ஸ்வாதி நாயுடுவின் கல்யாணம். ஸ்வாதி நாயுடுவை யாரென்று தெரியாதவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் எனில் கூகுளில் தேடலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யூ டியூபில் தேடலாம். ஏனெனில் உலகறிந்த சன்னி லியோன் போல அவரொரு போர்ன் ஸ்டார். தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக போர்ன் ஸ்டார் ஆன பெண்களில் இவரும் ஒருவர். அது மட்டுமல்ல தான் பி கிரேட் குறும்படங்களில் நடிப்பதை மறைக்க நினைக்காமல், இது என் தொழில், நான் என் குடும்பத்தைக் காப்பாற்றவும், ஊடகங்களில் எளிதில் பிரபலம் ஆகவும் குடும்பத்தினர் அனுமதிக்காத போதும் போர்ன் ஸ்டார் ஆனேன் என்று தனது நேர்காணல்களில் குறிப்பிடக் கூடிய பெண். 

  சரி... இப்படியான பெண்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்று தான் பலரும் நினைத்திருக்கக் கூடும். 

  ஆனால், பாருங்கள் ஸ்வாதி நாயுடுவுக்கு ஃபிப்ரவரி இறுதியில் திருமணம் இனிதே நடந்தேறியிருக்கிறது. இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் சம்மதத்துடனும், ஆசிர்வாதத்துடனும் நிறைவாகத் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ஸ்வாதி. அவரது திருமண விடியோவை வெளியிட்டு இது நிஜமான திருமணம் தான். ஃபிலிம் ஷூட் அல்ல என்று பகிரங்கமாக ஸ்வாதி அறிவித்திருக்கிறார். விடியோவின் கீழே பலதரப்பட்ட கமெண்டுகள் குவிந்திருக்கின்றன. சிலர் ஸ்வாதியை நாகரீகமற்று கலாய்த்திருந்தாலும் பலரும் பாசிட்டிவ்வாக ‘நிறைவான வாழ்க்கை வாழுமாறு’ அறிவுறுத்தி வாழ்த்தியிருந்தார்கள்.

  இளம்பெண்களில் சிலர் இன்றைக்கு இருக்கும் மீடியா மோகத்திலோ அல்லது அதிகப் பணம் சம்பாதிக்கும் ஆசையிலோ இல்லையேல் வாழ்வாதாரத்துக்கான வேறு வழியின்றியோ முறையற்ற வழிகளில் பிரபலங்கள் ஆகியிருக்கலாம். அவர்களுக்கு சந்தை மதிப்பு இருக்கும் வரை அவர்களின் பின் அல்வாத் துண்டைத் தேடி வரும் எறும்புச் சாரையாக மனிதர்கள் கூட்டம் பின் தொடரும். காலம் போன காலத்தில் அடுத்தவர்களின் பரிவுக்காக ஏங்கி, தன் கஷ்டங்களைப் பகிர தனக்கொரு சினேகமான உறவு கிடைக்காதா? என்று தேடித் தேடிக் களைத்து பின்னொரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பிரபல நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரை அறிந்திருக்கிறோம்.

  இதோ இந்தப் பெண் ஊரறிந்த போர்ன் ஸ்டார். அதை வெளியில் சொல்ல அவர் எப்போதும் தயங்கியதாகத் தெரியவில்லை. ஊராரின் ஏச்சு, பேச்சு, ஏடாகூட கமெண்ட்டுகள் அத்தனையையும் ஜீரணித்து இதோ தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

  இந்த ‘தில்’லைப் பாராட்டத் தான் வேண்டுமில்லையா?!


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai