Enable Javscript for better performance
app that translate language- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தெரியாத ஊர் புரியாத மொழியா? கவலை வேண்டாம், இந்தக் கருவி உங்களுக்கு உதவும்!

    By DIN  |   Published On : 18th August 2019 03:50 PM  |   Last Updated : 18th August 2019 03:50 PM  |  அ+அ அ-  |  

    KANDA

    கண்டது

    (கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் ஓர் அறையில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
    உங்கள் வலியை மறக்க...
    மனதைக் கவரும் புத்தகம் படிக்கவும்
    அருகில் இருப்பவர்களிடம் பேசவும்
    இசையில் மனதைச் செலுத்தி 
    கேட்கவும்
    வலி மறந்து (மறைந்து) போகும்.
    - மு.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர் -6

    (பொன்னமராவதியில் ஒரு ப்ளக்ஸ் கடையில்)
    விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்...
    விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்...
    - அ.கருப்பையா, பொன்னமராவதி.

    (நாகூர் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
    வாய்க்கால் வெட்டு
    என்.கஜேந்திரன், நிரவி.
    யோசிக்கிறாங்கப்பா!
    நீ மனுசனா... மிருகமான்னு 
    கேட்டால் கோபப்படுறாங்க...
    நீ சிங்கம்டா, புலிடான்னா 
    சந்தோஷப்படுறாங்க.
    - க.அருச்சுனன், செங்கல்பட்டு.

    கேட்டது
    • (பட்டுக்கோட்டை கடைத்தெருவில் இருவர்)
    " உங்களைப் பார்த்து நாலு வருஷமாச்சு. எப்படி இருக்கீங்க?''
    "இந்த நாலு வருஷமா நல்லா இருக்கேன்''
    - தா.ஜெசிமா பர்வின், கரம்பயம்.

    (சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே இருவர்)
    "யோவ்... உன் மகனும் உன்னை மாதிரி குசும்பு பிடிச்சவன்தான்யா''
    "எப்படிச் சொல்றே?''
    "போன வாரம் நான் வீட்டுக்கு வந்து உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கும்போது... போரடிக்குது ஏதாவது புக் இருந்தா குடுன்னு உன் மகன்கிட்ட சொன்னேன். அதுக்கு உன் மகன் கூச்சப்படாம கெமிஸ்ட்ரி புத்தகத்தைக் கொண்டு வந்து நீட்டுறான்யா''
    -வி.சீனிவாசன், சென்னை-62.

    எஸ்எம்எஸ்
    நண்பர்களெல்லாம் 
    நம்பர்களாக
    செல்போனில்...
    க.நாகமுத்து, திண்டுக்கல்.

    அப்படீங்களா!
    மொழி தெரியாத இடங்களுக்குச் சென்றால் பிறர் பேசுவதைப் புரிந்து கொள்வது சிரமம். "பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்' என்ற இந்த காதில் மட்டும் கருவியை மாட்டிக் கொண்டால், தெரியாத மொழியைப் பிறர் பேசினாலும், இந்தக் கருவி மொழிபெயர்த்து உங்களுக்குத் தெரியும் மொழியில் சொல்லிவிடும். ஆனால் பேசிய உடனே மொழிபெயர்த்து இந்தக் கருவி சொல்லாது. அதற்கு சிறிது கால தாமதமாகும். 

    தற்போது இந்தக் கருவி இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுகிறது. இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே செயல்படும்வகையில் இதை மாற்றி அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இந்தக் கருவி ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளை மட்டுமே மொழிபெயர்த்துச் சொல்கிறது. ஆனால் உலகின் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கும் திறனை இந்தக் கருவிக்கு ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

    "நம் மொழி தெரியாது' என்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைச் சத்தமாகத் திட்டுபவர்கள் இனிமேல் அவர்கள் காதில் ஏதேனும் கருவியை மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்த்துத் திட்ட வேண்டும். 

    - என்.ஜே., சென்னை-58.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp