ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நிஜமாகவே அந்தப் பெண் பயந்து போய் அழுவது விடியோவில் பதிவாகியிருக்கிறது. விடியோவைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும்.
ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

சீனாவில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, உயிரினங்களிடையே பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, தவளை, எலி, நத்தை, நட்டுவாக்காலி, ஆக்டோபஸ் என்று எந்த பாகுபாடும் கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் உணவாக்கி ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். பார்க்கும் அந்நியர்களுக்குத் தான்  ‘உவ்வேக்’ என்றிருக்கும். ஆனால் அவர்கள் என்னவோ காலம் காலமாக அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஒருபடி முன்னேறி, அசைவ உணவுகளை சமைக்காமல் அப்படியே சாப்பிடவும் பழகிக் கொண்டிருக்கிறார்கள் போலும். (சமைத்தால் தான் அது உணவு, சமைக்காவிட்டால் அது இரை என்பதெல்லாம் இந்திய மனப்பான்மை) அவர்களுக்கு எல்லாமும் ஒன்று தான்.

சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த பெண் வலைப்பதிவர் ஒருவர் ஆக்டோபஸ் ஒன்றை உயிருடன் சாப்பிட முயன்றிருக்கிறார். அந்த அசகாய முயற்சியை லைவ் ஸ்ட்ரீமில் அப்படியே சமூக ஊடகங்களில் பதிவேற்றவும் ஆசைப்பட்டு விடியோ எடுத்திருக்கிறார். அவரது ஆசை திடுக்கிடத்தக்க வகையில் கிட்டத்தட்ட உயிர் பயத்தைப் பரிசளித்திருக்கிறது.

நிஜமாகவே அந்தப் பெண் பயந்து போய் அழுவது விடியோவில் பதிவாகியிருக்கிறது. விடியோவைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும்.

உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே சாப்பிட முயன்றால், அது சும்மா இருக்குமா? தன் எட்டுக் கரங்களில் ஒன்றிரண்டு கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தை பிராண்டத் தொடங்கி விட்டது. பிராண்டுவதோடு தன்னியல்பாய் அந்தப் பெண்ணின் முகத்தில் சப்பக்கென ஒட்டிக் கொள்ளவும் முயன்றிருக்கிறது. ஆக்டோபஸின் எதிர்த்தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீனப்பெண் பயத்தில் கத்துவது விடியோவில் பதிவாகியிருக்கிறது. அத்துடன் ஆக்டோபஸ் அவரது முகத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தம் வருமளவு கடித்திருப்பதைப் பார்க்கையில் யாரைப் பார்த்து பரிதாபப் படுவது என்று தெரியவில்லை. ஆக்டோபஸை உண்பவர்கள் அதைச் சமைக்காமல் உண்ண ஆசைப்பட்டது ஏன்? இந்த விடியோவைப் பார்த்த பின்னும் இனிமேல் அப்படி ஏதும் முயற்சி செய்வார்களா என்ன? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com