சுடச்சுட

  

  இந்தா பாருங்க கத்தரி வெயிலைச் சமாளிக்க புது டெக்னிக்! காஸ்ட்லி காருக்கு மாட்டுச்சாண கவர்!

  By RKV  |   Published on : 22nd May 2019 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cow_dung_car

   

  அந்தக்காலத்துல கிராமப்புறங்கள்ள வீட்டுத்தரையை சாணத்தால மெழுகுவாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, மாட்டுச்சாணம் அதாவது பசுஞ்சாணம் மெழுகின தரை சும்மா குளு குளுன்னு இருக்கும்னு தெரியும், ஏன் அனுபவத்துலயும் கண்டிருக்கேன். தென்னோலை, பனையோலைக்கூரை வேய்ந்த வீடுகளில் பசுஞ்சாணத்தரை இருந்தால் மத்தியான நேரங்களில் வெட்கையே தெரியாது. இந்த டெக்னிக்கைத் தான் அகமதாபாத் அம்மணி ஒருவர் புதுமையான முறையில் தன் காருக்கும் கூட பயன்படுத்திப் பார்த்திருக்கார். அதைப் பார்த்து அதிசயிச்சுப் போன ஃபேஸ்புக் பிரபலம் ஒருவர், அதை அப்படியே ஃபோட்டோ பிடிச்சு தன்னோட பக்கத்துல பகிர இப்போ பாருங்க ஏராளமான பேர் அதை ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டு இருக்காங்க, சிலர் இதென்னடா கோமாளித்தனம்னு சிரிச்சாலும் பெரும்பாலானவங்க, இது நல்ல டெக்னிக்கா இருக்கே, ஆரோக்யமானதும் கூடன்னு அந்தம்மாவோட முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கவும் மறக்கல.

  அவங்க பேரு மிஸஸ் சாஜெல் ஷா. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வசிக்கிறாங்க, இவங்க தன்னோட காரைச் சுற்றி சாணத்தால் கவர் பண்ணியிருந்த புகைப்படத்தை கேட்டு வாங்கி இணையத்தில் பகிர்ந்தவரோட பேரு ரூபேஷ் கெளரங்கா தாஸ். அவர் தன்னோட ஃபேஸ்புக் பேஜ்ல என்ன சொல்லி இதைப் பகிர்ந்திருந்தார்ன்னா? ‘மாட்டுச்சாணத்தின் மிக அருமையான பயன்பாடு, நான் கண்டதிலேயே இது தான் பெஸ்ட்’ என்று சொல்லி இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். பார்க்க வித்யாசமா, வேடிக்கையா இருந்தாலும் இப்படியெல்லாம் அவங்களுக்குத் தோணியிருக்கே, தோணினதை அவங்க, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்களோன்னு வெட்கப்படாம... தைரியமா செயல்படுத்தியும் இருக்காங்களே, அப்போ அவங்களை நிச்சயம் நாமளும் பாராட்டினா குத்தமில்லையே!

  உண்மையில் மாட்டுச்சாணத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்குன்னு ஆயுர்வேதம் சொல்லுது. குஜராத்தின் 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொடுமையை ஈடுகட்ட இப்படி ஒரு அருமையான வழியைக் கண்டுபிடிச்சுச் சொன்ன மிஸஸ் சஜெல் ஷாவை நாமும் பாராட்டுவோம். 

  சென்னையிலும் தான் வெயில் கொளுத்துது, இந்த டெக்னிக்கை யாராச்சும் பயன்படுத்திப் பாருங்களேன். இங்கேயும் மாட்டுச்சாணம் கிடைக்காதா என்ன?
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai