ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பேக்கேஜிங்கிலிருந்து ஒழிக்க டப்பர்வேர் இந்தியா முடிவு!

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பேக்கேஜிங்கிலிருந்து ஒழிக்க டப்பர்வேர் இந்தியா முடிவு!

புது தில்லி, சமையலறைப் பொருட்கள் மற்றும் சமையல் பிராண்டான டப்பர்வேர் இந்தியா அக்டோபர் 1 முதல் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக

புது தில்லி, சமையலறைப் பொருட்கள் மற்றும் சமையல் பிராண்டான டப்பர்வேர் இந்தியா அக்டோபர் 1 முதல் தயாரிப்பு பேக்கேஜிங்கிற்கான ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய காகித அடிப்படையிலான உரம் தயாரிக்கும் பேக்கேஜிங் பொருளைப் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாற்றம் நிறுவனத்தின் செலவினங்களை சுமார் 7 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது, ஆனால் இந்த செலவினத்தை நுகர்வோர் தலையில் கட்ட நிறுவனம் அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

"ஆறு மாதங்கள் முழுமையான ஆராய்ச்சி, இந்தியாவில் இந்த முயற்சிக்கான ஆரம்ப சோதனை மற்றும் இதற்கான சர்வதேச சந்தைகளைத் தேர்ந்தெடுத்த பிறகு, டப்பர்வேர் இந்தியா எதிர்காலத்தில் தனது அனைத்து உற்பத்திகளுக்கும் அக்டோபர் 1, 2019 முதல் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பேக்கேஜைத் தவிர்த்து விட்டு கம்போஸ்டபிள் பேக்கேஜிங் பொருட்களுக்கு மாறத் தற்போது தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி குறித்து டப்பர்வேர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் தீபக் சாப்ரா பேசுகையில்..

‘எங்கள் உலகளாவிய பார்வையான 'வீணடிக்க நேரமில்லை' எனும் முன்னெடுப்பானது.. தயாரிப்பு கண்டுபிடிப்பு, பேக்கேஜிங் குறைப்பு, செயல்பாட்டு இலக்குகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மை மூலம் பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது."

நிறுவனத்தின் கூற்றுப்படி, 100 சதவீத மறுசுழற்சி செய்யக்கூடிய விதத்திலான இந்த கம்போஸ்டபிள் பேக்கேஜிங் (மட்கும் & மறு சுழற்சி செய்யத் தகுதியான பிளாஸ்டிக்) சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com