பால் விலை பெட்ரோல் விலையை விட அதிகம் இங்கே?!

மிகக்குறைந்த காலகட்டத்தில் லிட்டருக்கு ரூ 120 முதல் 140 வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் பால் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் ரூ 140 ஐயும் தாண்டிச் சென்று கொண்டிருப்பது அங்குள்ள மக்களைக் கவலையில்
பால் விலை பெட்ரோல் விலையை விட அதிகம் இங்கே?!

நேற்று மொஹரம் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானின் பிரதான நகரங்களில் பால் விலை எல்லையற்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. கராச்சி, சிந்து, மாகாணங்களில் லிட்டருக்கு 140 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் அங்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பாகிஸ்தானில் இன்றைய தேதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையைக் காட்டிலும் ஒரு லிட்டர் பால் விலை அதிகம் என்பது தான். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 113, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 91.

மிகக்குறைந்த காலகட்டத்தில் லிட்டருக்கு ரூ 120 முதல் 140 வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் பால் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் ரூ 140 ஐயும் தாண்டிச் சென்று கொண்டிருப்பது அங்குள்ள மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மத ரீதியிலான கடுமையான சடங்கு, சம்பிரதாயங்களில் ஈடுபடக்கூடிய இஸ்லாமிய பக்தர்களுக்கு இலவசமாக பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் இதர பானங்களை வழங்குவது பாகிஸ்தானில் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களில் ஒன்று. அதன் காரணமாக பாலின் தேவை மிக அதிகரிக்கவே தேவையின் பொருட்டே பால் விலை மொஹரம் அன்றும் அதையொட்டிய நாட்களில் அதன் உச்சத்தைத் தொட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பண்டிகை முடிந்ததும் பால் விலை படிப்படியாகக் குறையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com