சுடச்சுட

  

  இந்தியாவின் மிக விலையுயர்ந்த குடியிருப்புப் பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் சென்னையின் வலுவான தாக்கம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 10th September 2019 02:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennai1

   

   

  சமீபத்திய ஆய்வொன்றில் சென்னையின் மூன்று குடியிருப்புப் பகுதிகள், இந்தியாவின் மிக விலையுயர்ந்த பகுதிகளுக்கான டாப் 10 பட்டியலில் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இதன்மூலமாக இந்தியாவின் ஹைடெக் நகரங்களின் பட்டியலில் சென்னை அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. 

  சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், எக்மோர், அண்ணாநகர் உள்ளிட்ட மூன்று பிரதான குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்தியாவின் சொத்துச் சந்தையில் டாப் டென் லிஸ்டில் முறையே 4, 5, 7 ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதென்பது அப்பகுதியில் உள்ள நிலத்தின் ஒரு சதுர அடிக்கான பண மதிப்பைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.

  அதன்படி சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு சதுர அடி மனையின் தற்போதைய நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது 18,000 ரூபாயாக உள்ளது.

  எக்மோரில் ஒரு சதுர அடி மனையின் விலை ரூ.15,100, அண்ணாநகரில் 13,000 ரூபாயாகவும், கீழ்பாக்கத்தில் 10,600 ரூபாயாகவும், சென்னை, கோட்டூர்புரத்தில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 9,600 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

  சென்னையில் சராசரியாக ஒரு ஆடம்பர அபார்ட்மெண்ட் என்பது 2,190 சதுர அடி முதல் 2,890 சதுர அடிக்குள் அடங்கும்.

  இதையும் பாருங்க... வீட்டு வசதிக் கடன்களுக்கு  8.20% வட்டி விகிதம்

  டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகள் தவிர சென்னையின் அனைத்துப் பகுதிகளிலுமே தற்போது சதுர அடி மனையின் விலையில் குறையேதும் இல்லை. பொருளாதாரச் சுணக்கம் நீடிக்கும் இந்த நேரத்தில் கூட மனை விலையில் அதிரடி மாற்றங்களேதும் நிகழ்ந்துவிடவில்லை.

  சென்னை ஆழ்வார் திருநகரில் ஒரு சதுர அடி மனையின் விலையானது 6,758 முதல் - 7,565 ஆக நீடிக்கிறது.

  மாங்காடு - 3,485 முதல் 4,080 ரூபாய் வரை...

  சென்னை சொத்துச் சந்தை விலைப்பட்டியல்
  குடியிருப்புப் பகுதிகள் சதுர அடி மனையின் விலை
  ஆழ்வார் திருநகர் Rs. 6,758 - 7,565/sq. ft.
  அயப்பாக்கம் Rs. 3,400 - 3,782/sq. ft.
  மதுரவாயல் Rs. 5,142 - 6,035/sq. ft.

  வானகரம்

  Rs. 4,930 - 5,015/sq. ft.
  ஐய்யப்பந்தாங்கல் Rs. 3,910 - 4,250/sq. ft.
  மாங்காடு  Rs. 3,485 - 4,080/sq. ft.
  முகலிவாக்கம் Rs. 5,058 - 5,652/sq. ft
  பூந்தமல்லி Rs. 3,612 - 4,122/sq. ft
  திருவேற்காடு Rs. 4,165 - 4,930/sq. ft.
  மாங்காடு Rs. 3,485 - 4,080/sq. ft.
  சூளைமேடு
  Rs. 6,460 - 7,820/sq. ft.
  அடையாறு Rs. 10,582 - 13,218/sq. ft.
  பெசண்ட் நகர் Rs. 12,538 - 13,940/sq. ft.
  குரோம்பேட்டை
  Rs. 4,165 - 5,100/sq. ft.

   

  இதே போல சென்னையின் பிற இடங்களிலும் சதுர அடி மனையின் விலையென்பது குறைந்த பட்சம் 3,500 ரூபாயில் இருந்து அதிக பட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 18,000 ரூபாய் வரை நீடிக்கிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai