
பிரிட்டன் இளவரசி சார்லட்... பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தின் வாரிசான இளவரசி சார்லட்டை ஞாபகமிருக்கிறதா? உலகின் காதல் தேவதையாகக் கருதப்படும் மறைந்த இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸின் மூத்த வாரிசு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி காத்ரீனின் இளைய மகள் தான் இளவரசி சார்லட். அடேயப்பா, இந்தக் குடும்பத்தில் தான் எத்தனையெத்தனை இளவரசன்கள் மற்றும் இளவரசிகள்?!
இவர்களில் குயின் பட்டத்துக்குரியவர் தற்போதைய ராணி எலிஸபெத் மட்டும் தான். ராணிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அரசியல் தளத்தில் எவ்வித அதிகாரமுமில்லை என்ற போதும் ராணி ஆட்சேபிக்காத ஒருவரே அங்கு பிரதமராக முடியும். அந்தளவுக்கு மக்களிடையே செல்வாக்கு மிக்க குடும்பங்களில் முதன்மையானதாக இக்குடும்பம் விளங்குகிறது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தாண்டி இன்று வரை உலகின் மன்னர் குடும்பப் பரம்பரையில் இந்தக் குடும்பத்திற்கு கிடைத்து வரும் மரியாதை என்பது வேறு எந்த அரச குடும்பத்தினரும் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவை.
இதை எதற்குச் சொல்லத் தோன்றுகிறது என்றால்;
இந்தக் குட்டிப்பாப்பா வரும் செப்டம்பர் 5 முதல் பள்ளிக்குச் செல்லவிருக்கிறாராம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது குடும்ப அளவில் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக இருக்கலாம். அதை ஊடகங்களில் செய்தியாக வெளியிடும் அளவுக்கு அது மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்பட வேண்டுமெனில் அந்த வாரிசு பிரிட்டிஷ் ராயல் குடும்ப வாரிசாக இருந்தால் மட்டுமே சாத்தியம்! என்பதைச் சொல்லத் தான்.
லண்டனில் இருக்கும் செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் மே 2 2015 ஆம் ஆண்டில் பிறந்தவரான இளவரசி சார்லட்டுக்கு தற்போது வயது 4. இவரது முழுப்பெயர் சார்லட் எலிஸபெத் டயானா. சார்லட்டுக்கு ஒரு அண்ணனும், தம்பியும் உண்டு. அண்ணனை ஏற்கனவே பள்ளியில் சேர்த்து விட்ட நிலையில் இனிமேல் அண்ணனுடன் இணைந்து சார்லட் பள்ளி செல்லவிருக்கிறாராம். பள்ளிக்கூடத்தைப் பொருத்தவரை அந்த சுற்றுப்புறத்தையும், நண்பர்களையும் சார்லட்டுக்கு அறிமுகப்படுத்தி சுமுகமாக அவளைப் படிப்பின் பால் திசை திருப்பும் பொறுப்பும் இனிமேல் அண்ணனும் இளவரசனுமான இளவரசர் ஜார்ஜுக்குரியது. இனிமேல் அண்ணனுடன் பள்ளிக்குச் செல்லவிருக்கிறார் இளவரசி சார்லட் என கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் அதிகாரப் பூர்வ செய்தி பகிர்ந்திருக்கிறது.
மிஸ்டர் மற்றும் மிஸ் பப்ளிக் பொதுவெளியில் மாற்றிக் கொள்ள வேண்டிய அநாகரிகச் செயல்கள்
ஒரு காபியில் என்ன இருக்கிறது? கஃபே காஃபி டே நினைவலைகள்!
கூடல் சங்கமேஸ்வரர் - ஐந்து உடல், ஒரு தலை சிற்பம்!
சிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்!
நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.