சிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்!

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்தக் காய்கறிகளுக்கு அந்த நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியாக்காரர்களை வசீகரிக்கும் தேனி மாவட்டத்து இயற்கை காய்கறிகள்!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சார்ந்த விவசாயிகள் பூச்சிக்கொல்லி கலக்காமல் இயற்கை முறையில் விளைவிக்கும் வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் இந்தக் காய்கறிகளுக்கு அந்த நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை ஒட்டிய சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேதியியல் பூச்சிக்கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறார்கள். இந்தக் காய்கறிகளுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து கொள்முதல்காரர்கள் காய்கறிகளைத் தரம் பார்த்து பிரித்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விவசாயிகளின் போக்குவரத்துச் செலவும் பெருமளவுக்குக் குறைகிறது. அத்துடன் இங்கு வாங்கப்படும் காய்கறிகள் விமானம் மூலமாக மறுநாளே சிங்கப்பூர், மலேசியா சென்று அடைவதால் காய்கறிகளைப் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கத் தேவையென பிரிசர்வேட்டிவ்கள் எதையும் சேர்க்கும் அவசியமும் இல்லாமலாகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளில் பலர் இயற்கை முறை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகளின் மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப் படுவதா? அல்லது இந்தக் காய்கறிகளை எல்லாம் நம்மூர் மக்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி உண்ண முடியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கும் நிலை இருக்கிறதே?! என்று ஆதங்கப்படுவதா? என்று தெரியவில்லை. 

எது எப்படி விவசாயிகள் மனம் மகிழ்ந்தால் சரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com