சுடச்சுட

  
  indianbank


  வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்ற விகிதத்தில் பெறலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
  ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித பரிந்துரையின் தொடர்ச்சியாக இந்தியன் வங்கியின் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வந்தது. தற்போது வீட்டு வசதிக் கடன்களை ஆண்டுக்கு 8.20 சதவீதம் என்னும் வட்டி விகிதத்திலே பெறலாம். இது சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும். இதைப்போல, வாகனக் கடன்களை ரெப்போ விகித முறையின் கீழ் ஆண்டுக்கு 8.85 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதுவும் சந்தையில் விளங்கும் மிகக்குறைந்த வட்டி விகிதமாகும்.
  சிறப்பு அம்சங்கள்:  வீட்டுவசதிக் கடனைப் பொருத்தவரை, அதிகப்படியான திரும்பச் செலுத்துதலுக்கான கால வரையறை 30 ஆண்டுகள், அதிகபட்ச உச்சவரம்பு இல்லை. 2020-ஆம் ஆண்டு ஜனவரி 31 -ஆம்தேதி வரை  விண்ணப்ப பரிசீலனை கட்டணம் கிடையாது. வாகனக் கடனைப் பொருத்தவரை, புதிய நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும். அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம்.  திரும்பச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரையறை 84 மாதங்கள். இந்தத் தகவல் இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai