தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

'மருத்துவமனைகளைவிட வீட்டு சுகாதாரப் பராமரிப்பு கரோனாவிலிருந்து மீள உதவும்'

மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 7:49 am

மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வீட்டு சுகாதாரப் பராமரிப்பில் இருந்த 94 சதவீதம் பேரின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் 87 சதவீதம் பேருக்கு எந்தவிதமான பாதகமான நிகழ்வுகளும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

பென்சில்வேனியா பல்கலைக்கழக நர்சிங் பள்ளி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வு 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆனால் கரோனா நோயாளிகள் வீட்டிற்குத் திரும்பியவுடன் அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்களா அல்லது அவர்களுக்கு மருத்துவத் தேவைகள் ஏதேனும் தேவைப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று ஆய்வு கூறுகிறது. 

நோயின் தீவிரம் அதிகமுள்ளவர்கள் வீட்டிற்குச் சென்றதும் கடினமான சூழ்நிலைகளை அணுகுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 1,400க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தரவுகள்  சேகரிக்கப்பட்டுள்ளன. 

'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது' என்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான கேத்ரின் எச். பவுல்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.