காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே உடலில் பாதி பிரச்னைகள் சரியாகி விடும். பெரும்பாலாக உடல் பிரச்னைகள், நோய்கள் நமது வயிற்றில் இருந்துதான் தோன்றுகின்றன. எனவே, வயிற்றை சுத்தமாக வைத்துக்கொண்டாலே உடலியல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அவ்வாறு வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியம்.
► காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு உடலில் உள்ள கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டும்.
► தண்ணீரானது உடல் முழுவதும் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாலே பின்னாளில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால், உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
► காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடல் எடை குறையும். உணவு செரிமானத்தைத் தூண்டும்.
► அதேபோன்று சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னும் சூடான/வெதுவெதுப்பான நீரை குடிப்பது மிகவும் நல்லது.
► அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சோர்வான உடலியல் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், எந்தவொரு வேலையையும் எளிதாக செய்ய முடியும். மேலும், உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதாலும் முகமும் பொலிவு பெறும்.
► எனவே, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் எழுந்தவுடனும், மற்ற நேரங்களிலும் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.
► அதிகபட்சமாக உடல் எடை கொண்டவர்கள், அதிகமாக வியர்வையை வெளியேற்றுபவர்கள் காலையில் மட்டுமே அதிகபட்சமாக 1 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு சேர்த்தும் குடிக்கலாம்.
► சாதாரணமானவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் அல்லது 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கும் குறைவாக தண்ணீர் குடித்தால் உடல் சோர்வில் இருந்து சிறுநீரகம் வரை பல தொந்தரவுகள் ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


