விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

100 கோடிப் பயனாளர்களைக் கடந்த ‘டிக்டாக்’ செயலி

பிரபல செயலிகளில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருக்கிறது.

News image
100 கோடிப் பயனாளர்களைக் கடந்த ‘டிக்டாக்’ செயலி
Updated On :28 செப்டம்பர் 2021, 6:14 am

தினமணி

பிரபல செயலிகளில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருக்கிறது.

இசையுடன் நடனம் மற்றும் தனித்திறன்களை விடியோ மூலம் வெளிப்படுத்தும் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். முக்கியமாக இந்தியாவில் இதனைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5.5 கோடி தினசரி பார்வையாளர்களை மட்டும் கொண்டிருந்த இச்செயலியை தற்போது மாதம் 100 கோடி பேர் உபயோகப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.

இதனால் , குறிப்பிட்ட காலத்தில் இத்தனை பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தற்காக பயனாளர்களிடம் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ’டிக்டாக்’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் மற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் மாதம் 350 கோடி பயனாளர்களையும் , யூடியூப் 345 கோடிப் பயனாளர்களையும் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் டிக்டாக் சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலி என்றாலும் இதைப் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கா , ஐரோப்பா , பிரேஸில் நாடுகளில் தான் அதிகம் . 

மத்திய அரசு கடந்த ஆண்டு இந்தியாவில் 59 செயலிகளை தடை செய்தது. அதில் சமூகத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘டிக்டாக்’செயலியையும் தடை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.