'90% இளம் பெண்கள் இப்படித்தான் புகைப்படம் வெளியிடுகிறார்களாம்.. உஷார்'

ஃபில்டர் அல்லது எடிட் செயலிகளைக் கொண்டு திருத்திய பிறகே ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
'90% இளம் பெண்கள் இப்படித்தான் புகைப்படம் போடுகிறார்களாம்.. உஷார்'
'90% இளம் பெண்கள் இப்படித்தான் புகைப்படம் போடுகிறார்களாம்.. உஷார்'


லண்டன்: உலகில் வாழும் 90% இளம்பெண்கள், செல்லிடப்பேசிகளில் எடுக்கும் தங்களது புகைப்படங்களை ஃபில்டர் அல்லது எடிட் செயலிகளைக் கொண்டு திருத்திய பிறகே ஆன்லைன் அல்லது செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதாவது, செல்லிடப்பேசியில் இளம்பெண்கள் புகைப்படம் எடுக்கும் போது, அதை ஃபில்டர் அல்லது எடிட் செயலிகள் மூலம் சருமத்தின் நிறத்தை மாற்றுவது, முகத்தாடை அல்லது மூக்கின் வடிவத்தை மாற்றிக் கொள்வது, முகத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்றுவது என பலவற்றை செய்கிறார்களாம். அது மட்டுமல்ல, பற்களின் நிறத்தையும் பளீச்சென்று மாற்றிக் கொள்வதாக அந்த ஆய்வு மிரள வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் இன்ஸ்டகிராம் செயலியில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 10 கோடி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இதுபோன்று பார்வையில் ஆதிக்கம் நிறைந்த ஒரு சமூகத்தை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை என்று இந்த ஆய்வை மேற்கொண்ட லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஸாலிண்ட் கில் கூறுகிறார்.

இதுபோன்று மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து ஏராளமான விருப்பங்களை அள்ளும்போது, அதனால் ஒரு ஆழ்மன இன்பம் ஏற்படுகிறது. மற்றவர்களது கவனம் கிடைக்கிறது. ஆனால் இதன் மூலம் ஏராளமான பெண்கள் மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் கில் தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வு சுமார் 200 இளம் பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆய்வில், ஏராளமான இளைஞர்கள், ஊடகங்களில் வரும் அதிக வெள்ளையான, அதிக கவர்ச்சியானவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டிருப்பதும், அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவது மற்றும் அதிக கவனம் செலுத்தப்படுவதையும் அதிருப்தியோடு சுட்டிக்காட்டுகிறார்கள் என்று தெரிய வருகிறது.

இந்த தாக்கத்தினால்தான், இளம் பெண்கள் தங்களது புகைப்படங்களை ஃபில்டர் அல்லது எடிட் செயலிகள் மூலம் மாற்றியமைத்து தங்களது தோற்றத்தை ஒருபடி மேலே அழகாக்கி வெளியிடுகிறார்கள். இதன் மூலம் தங்களது நண்பர்கள் அல்லது சகாக்களுக்கு மத்தியில் தாங்கள் அழகாக இருப்பதை தொடர்ந்து பராமரிக்கவும் செய்கிறார்கள் என்கிறது ஆய்வு.

மேலும், இந்த கரோனா பேரிடர் காலத்தில், இளம்பெண்களுக்கு ஏற்படும் கவலை, துயரம் போன்றவை அதிகரித்திருப்பதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாகவும் அதில் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com