நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!

ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுதான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!
Published on
Updated on
2 min read

ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுதான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலம் தாழ்த்துவது என்பது எல்லோருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்றுதான். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மனநிலை சரியில்லாமலோ அல்லது எதிர்பார்த்த 'அவுட்புட்' வரவில்லை என்றாலே 'நாளைக்குச் செய்துகொள்ளலாம்' என்று அந்த வேலையை தள்ளிவைப்பதுண்டு. 

இன்று ஒருவரை சந்திக்கச் செல்ல வேண்டும் என்ற நிலையில் சூழ்நிலை மோசமாக இருந்தால் அதை அடுத்த நாளுக்கு ஒத்திவைப்பதுண்டு.

ஒருவேளை அந்த வேலைக்கு காலக்கெடு இருந்தால் அதற்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

இந்நிலையில், காலம் தாழ்த்துவதற்கும் காலக்கெடு நிர்ணயிப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து நியூசிலாந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில முடிவுகள் தெரியவந்துள்ளன. 

விருப்பமில்லாத காரணத்தினால் இன்று செய்ய வேண்டிய ஒன்றை நாளைக்கோ அல்லது காலக்கெடு முடியும் வரையிலோ தள்ளிப்போடுவதற்குக் காரணம் காலக்கெடு நிர்ணயிக்கப்படுவதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

அதாவது ஒரு பணியைத் தள்ளிபோடுவதற்கு, காலக்கெடு அல்லது குறுகிய காலக்கெடு(short deadline) வைப்பதுதான் காரணம் என்றும் ஒரு வேலையை விரைந்து முடிக்க காலக்கெடு உதவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆய்வின் முடிவுகள் 'எக்கனாமிக் என்கொயரி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒடாகோ பிசினஸ் ஸ்கூல்-பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் நோல்ஸ் மற்றும் அவரது இணை ஆசிரியர்கள் இந்த முடிவை தெரிவித்துள்ளனர். 

நீண்ட காலக்கெடு - அதாவது ஒரு வருடம், பல மாதங்கள் என்று காலக்கெடு நிர்ணயிக்கும்போது, 'இன்னும் நேரமிருக்கிறது' என்று வேலையை தள்ளிப்போடுவது, அவ்வாறே கடைசி நேரத்தில் வேலையை முடிக்க முற்படும்போது வேலை அரைகுறையாக முடிய வாய்ப்புள்ளது. 

அதுவே காலக்கெடு இன்றி இருக்கும்போது மனிதர்களின் மனநிலை வேறுபடுகிறது. எந்தவொரு அழுத்தமும் இல்லாத சூழ்நிலையில் பணி விரைவாகவும் சிறப்பாகவும் முடிக்கப்படுகிறது. சிறப்பான முடிவுகளுக்கு குறைந்த காலக்கெடுவை நிர்ணயிக்கலாம். அதாவது, ஒரு பணியைச் செய்ய ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் என காலக்கெடுவை நிர்ணயித்தாலும் வேலைகள் சரியாக முடிக்கப்படும் என்று ஆய்வு கூறுகிறது. 

இதற்காக மாணவர்களுக்கு ஒரு கணக்கெடுப்பு வேலை கொடுக்கப்பட்டது. காலக்கெடு இல்லாதபோது கணக்கெடுப்புகள் விகிதம் அதிகமாகவும் காலக்கெடு நிர்ணயிக்கும்போது மிகவும் குறைவாகவும் இருந்தது உறுதி செய்யப்பட்டது. 

எனவே, நீங்களும் காலக்கெடு இன்றியோ அல்லது குறைவான காலக்கெடுவுடனோ ஒரு வேலையைச் செய்து பாருங்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com