புதிய நிறுவனத்தில் சேருகிறீர்களா? 5 முக்கிய குறிப்புகள்!

ஒரு புதிய நிறுவனத்தில் வேலையில் சேரும்போது அந்த நிறுவனத்தின் சூழல், சக பணியாளர்கள், வேலை நேரம், வேலை அழுத்தம் என பல கேள்விகள் எழுவது சகஜம்தான்.
புதிய நிறுவனத்தில் சேருகிறீர்களா? 5 முக்கிய குறிப்புகள்!

ஒரு புதிய நிறுவனத்தில் வேலையில் சேரும்போது அந்த நிறுவனத்தின் சூழல், சக பணியாளர்கள், வேலை நேரம், வேலை அழுத்தம் என பல கேள்விகள் எழுவது சகஜம்தான். இந்த கேள்விகளினூடே புதிய வேலை என்ற ஒரு உற்சாகமும் இருக்கும். 

கனவை நோக்கி பயணப்படும் ஒவ்வொருவரும் வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல புதிய இடங்களின் அனுபவங்களைப் பெற வேண்டும். அது கற்றுக்கொடுக்கும் பாடங்களை உட்கிரகிக்க வேண்டும். 

எவ்வாறாயினும் ஒரு புதிய வேலையைத் தொடங்கும்போது புதிய சூழலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அவ்வாறான புதிய வேலைச் சூழலில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.. 

நேர மேலாண்மை

உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடிக்க இது உதவும். இதுவும் ஒரு முக்கியமான தலைமைத்துவ திறன் என்பதையும் மறந்துவிட வேண்டாம். காலம் கடந்து செய்யும் வேலை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்துங்கள் 

அலுவலகத்தில் வேலை ரீதியாக உங்களது தனிப்பட்ட விருப்பங்களை உயர் அதிகாரியிடம் வெளிப்படுத்துங்கள், உங்களது கருத்துகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம், சக பணியாளர்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள். உரையாடுங்கள்.

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். முழு மனதுடன் வேலை செய்யுங்கள். சரியான நேரத்திற்கு இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். 

திறமையை வெளிப்படுத்துங்கள் 

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும். உங்கள் வேலை சார்ந்து அவற்றை சரியான நேரத்தில் வெளிப்படுத்துங்கள். சிலர், வேலையின் ஆரம்பக் கட்டத்தில் உயர் அதிகாரியைக் கவர, மிகவும் மெனக்கெடுவார்கள். ஆனால், அது நிரந்தரமானது அல்ல. உண்மையில், நிறுவன வளர்ச்சிக்கு உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் அதற்கான பலன் தானாகவே உங்களை விரைவில் வந்து வரும். 

கெட்ட பழக்கங்களை விட்டொழியுங்கள் 

ஒரு புதிய இடத்திற்கு செல்லும் பழைய அலுவலகத்தில் உங்களிடம் இருந்த கெட்ட விஷயங்களை விட்டுவிடுங்கள். சக பணியாளர்களை பற்றி பேசுவது, சரியாக வேலை செய்யாதது என தவறான விஷயங்களை தவிர்த்துவிடுங்கள்.

புதிய நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுங்கள். ஒரு புதிய வேலை, புதிய தொடக்கத்தையும் உங்களை மீட்டமைப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். 

நேர்மறையாக சிந்தியுங்கள் 

சிலர் புதிய வேலை என்றவுடன் அது செட் ஆகுமா என்று யோசிப்பார்கள். அதெல்லாம் மனதைப் பொருத்தது. இந்த வேலை நிறுவனம், உங்களுக்கானது என்று நேர்மறையாக சிந்தியுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு இந்த வேலை உதவும் என்று நம்புங்கள். நேர்மறையான எண்ணங்களே செயல்களாக மாறும். 

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு புதிய வேலையும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொடுக்கின்றன. எனவே, அந்த புதிய அனுபவத்தைப் பெற தயாராகுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com