இடது கை பழக்கமுடையோர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இடது கை பழக்கம் கொண்டவர்கள் வாழ்வதில் சந்திக்கும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி இடது கை பழக்கமுடையோர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இடது கை பழக்கமுடையோர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
இடது கை பழக்கமுடையோர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

வலது கை பழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகில், இடது கை பழக்கம் கொண்டவர்கள் வாழ்வதில் சந்திக்கும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி இடது கை பழக்கமுடையோர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இடது கை பழக்கமுடையவர்களில் பலரும் அவர்களது துறையில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அமிதாப் பச்சான், பில் கேட்ஸ், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், ரத்தன் டாடா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இதில் ஒரு ருசிகரத் தகவல் என்னவென்றால், டென்னிஸ் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், வலது கை பழக்கமுடையவர்தான். ஆனால், டென்னிஸ் விளையாட்டில் இடதுகை ஆட்டக்காரர்களுக்கு இருக்கும் பல்வேறு வசதிகளைக் கருத்தில் கொண்டு இடது கையில் டென்னிஸ் விளையாடக் கற்றுக் கொண்டார். டென்னிஸ் விளையட்டில் அவர் முன்னணியில் இருப்பதும் அனைவரும் அறிந்தது.

இதுபோன்ற ஒரு சில ருசிகர தகவல்கள்..

1. உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 - 12 பேர் இடது கை பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள்.
2. இடது கை பழக்கமுடையவர்களுக்கு வெளிக் காரணிகளால் ஒவ்வாமை ஏற்படுவது 11 மடங்கு அதிகம்.
3. 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, இடது கை பழக்கமுடையவர்கள் வலது கை பழக்கமுடையவர்களைக் காட்டிலும் அறிவுத்திறனில் சிறந்து விளங்குவர்.
4. பெண்களைக் காட்டிலும் 23 சதவீதம் ஆண்கள் இடது கை பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள்.
5. வலது கை மற்றும் இடது கை பழக்கம் கொண்டவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் பணி அல்லது ஒரு சவாலை வெவ்வேறு விதத்தில் அணுகுகிறார்கள். வலது கை பழக்கம் கொண்டவர்களை விட, இடது கை பழக்கம் கொண்டவர்கள் மிகச் சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருக்கிறார்கள்.
6. டென்னிஸ் வீரர்கள், நீச்சல் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் இடது கை பழக்கமுடையவர்கள் மற்றவர்களை விடவும் சிறப்பாக விளையாடுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான முன்னணி டென்னிஸ் வீரர்கள் இடது கை பழக்கமுடையவர்கள்தான்.
7. தனிநபர் விளையாட்டுகளில் இடது கை பழக்கமுடையவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com