கண் எரிச்சலா? கையாள்வது, தவிர்ப்பது எப்படி?

கண்களில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு இருக்கிறதா? கண்களைத் தொடர்ந்து தேய்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படி இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். 
கண் எரிச்சலா? கையாள்வது, தவிர்ப்பது எப்படி?

கண்களில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு இருக்கிறதா? கண்களைத் தொடர்ந்து தேய்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படி இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

கண் அரிப்பு, கண் எரிச்சல் அல்லது கண் ஒவ்வாமை என்பது பொதுவான பிரச்சனைதான். கண்களில் தூசு விழுந்தால்கூட சிறிது நேரத்திற்கு அரிப்பு ஏற்படலாம். ஆனால், தொடர்ச்சியாக அடிக்கடி இருந்தால் அது கண் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். 

மகரந்தம், விலங்குகளின் ரோமம், அச்சு, தூசிப் பூச்சிகள், மேக் அப், கண்களுக்கு போடக்கூடிய சொட்டு மருந்துகள் உள்ளிட்டவைகளின் காரணமாக கண் அரிப்பு/ஒவ்வாமை ஏற்படலாம்.

உடலில் இருந்து ஹிஸ்டமைன் ரசாயனம் வெளிவருவதால் கண்களைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி கண்களில் நீர் வடியச் செய்கிறது. இதனால் கண் அரிப்பு ஏற்படுகிறது. 

மாறாக, கண்கள் சிவப்பு நிறமாக மாறினால் அது ஒவ்வாமை கெரட்டோ கான்ஜுன்க்டிவிடிஸ்(keratoconjunctivitis) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு வகையான ஒவ்வாமை, கண்ணின் மேற்பரப்பில் வீக்கத்தை உருவாக்குகிறது. இது பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதுபோன்று கண் ஒவ்வாமைகளில் பல வகைகள் உள்ளன. 

எதனால் ஏற்படுகிறது?

♦ நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளின் எதிர்வினையால் கண் அரிப்பு ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, ஆன்டசிட்ஸ், ஹார்மோன் மாற்று மருந்துகள், கீமோதெரபி மருந்துகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளால் கண் எரிச்சல் ஏற்படலாம். 

♦ கண்கள் உலர்ந்து போதல். 

♦ கான்டாக்ட் லென்ஸ்கள் காரணமாக தொற்று.

♦ சிகரெட் புகை, ரசாயன வாயுக்கள் படுவதால் ஏற்படும் எரிச்சல். 

♦ கண் இமைகளின் வீக்கம் (Blepharitis)

♦ காற்று மாசுபாடு மற்றும் புகைமூட்டம். 

என்ன செய்ய வேண்டும்?

♦ கண் எரிச்சல் ஏற்படும்பொது ஒரு குளிர்ந்த துணி கொண்டு ஒத்தி எடுக்கலாம் அல்லது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

♦ கண்களில் உள்ள சில துகள்கள் அல்லது தூசி காரணமாக கண் அரிப்பு ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீர் அல்லது உப்பு கரைசலைப் பயன்படுத்தி கண்களில் இருந்து அதை அகற்றலாம்.

♦ உங்கள் கார் அல்லது வீட்டின் ஜன்னல்களை மூடுதல். 

♦ வெளியில் செல்லும்போது சன்கிளாஸ்களை அணியலாம். 

♦ கண்களை தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களைத் தொடர்ந்து தேய்ப்பது கண்ணின் மேல் அடுக்கை சேதப்படுத்தும். இது கண் வலி மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.

♦ கண் எரிச்சலைத் தவிர்க்க உங்கள் தலைமுடி, கண் இமை, சருமத்தில் உள்ள அழுக்குகளை அவ்வப்போது நீக்க வேண்டும். இதற்கு முகத்தை அடிக்கடி கழுவலாம், தலையில் பொடுகு,  அழுக்கு இருந்தால் கண்டிப்பாக குளிக்க வேண்டும். 

♦ விலங்குகளைத் தொட்ட பிறகு கைகளைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

♦ கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி அவற்றை மாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.

♦ கண் எரிச்சல் தொடர்ந்து இருந்தாலோ வலி ஏற்படுத்தினாலோ கண்டிப்பாக கண் மருத்துவரை அணுக வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com