
புதிய அம்சங்களையும், வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக ‘வாய்ஸ் ஸ்டேடஸ்’ வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப் நிலைத்தகவலில்(status) ஏதேனும் செய்தி அல்லது இணையப் பக்கத்திற்கான இணைப்பை(லிங்க்) பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தைக்(preview) காணும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் நிலைத்தகவலில் குரலைப் பேசி பதிவு செய்யும் வாய்ஸ் ஸ்டேடஸ்( voice status) வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
முதல்கட்டமாக இந்த வசதி பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. சோதனை முடிந்த, அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.