தலைமுடி சொல்லும் 2 ரகசியங்களைக் கேட்டிருக்கிறீர்களா?

தலைமுடி உதிர்வது என்பது பெரும்பாலும் எல்லோரும் சொல்லும் குறைபாடுதான்.
தலைமுடி சொல்லும் 2 ரகசியங்களைக் கேட்டிருக்கிறீர்களா?
தலைமுடி சொல்லும் 2 ரகசியங்களைக் கேட்டிருக்கிறீர்களா?

தலைமுடி உதிர்வது என்பது பெரும்பாலும் எல்லோரும் சொல்லும் குறைபாடுதான். தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறது என்று சொல்லும்போது அவர்களது முகத்தில் ஆழ்ந்த கவலை இருப்பது நன்றாகவே தெரியும்.

சரி தலை முடி உதிர்வதை நினைத்து பலரும் கவலைப்படுவது ஏன்? பெரும்பாலும் முடியின் அடர்த்தி குறைந்துவிடுமே என்று பெண்களும், தலை வழுக்கையாகிவிடுமோ என்று ஆண்களும் கவலைப்படுகிறார்கள். அப்படித்தானே?

பிரிட்டிஷ் நர்ஜிங் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், விட்டமின் பி12 குறைபாடுள்ள 1000 நோயாளிகளில் 30 சதவீதம் பேருக்கு தலைமுடி அடர்த்தி குறைவது, வாய் அல்சர், மங்கலான பார்வை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஆனால் உண்மையிலேயே தலை முடி உதிர்ந்தால் அதுவும் கொத்து கொத்தாக உதிர்ந்தால் நாம் நிச்சயம் கவலைப்பட வேண்டும். ஆனால் உதிர்ந்து போன முடிக்காக அல்ல.. நமது உடலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்காக.. 

தலைமுடி என்பது உதிர்வது இயற்கைதான் ஆனால், அதிகம் கொட்டுவதோ அல்லது புதிய முடிகள் வளராததோ நிச்சயம் நமது உடலில் இருக்கும் குறைபாடுகளின் வெளிப்பாடுதான் என்பதை உணர வேண்டும்.

அதாவது நமது உடலுக்கு விட்டமின் பி12 என்பது மிகவும் அத்தியாவசியம். நரம்புகளின் செல்கள் மற்றும் ரத்தத்தில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருக்க விட்டமின் பி 12 அவிசயம். உங்கள் டிஎஏவை உருவாக்கவும் இது முக்கியம். ஆனால் நமது உடல் விட்டமின் பி12ஐ தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் சத்தான பானங்கள் மூலமாக அதனை உடலுக்குள் செலுத்த முடியும். இறைச்சி, பால் பொருள்களில் இந்த பி12 அதிகம் சேர்ந்திருக்கும். இது கிடைக்காமல் போனால், நமது உடல் ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும்.

அதாவது, விட்டமின் 12 குறைபாடு என்பது, நமது உடலுக்கு பி12 விட்டமின் கிடைக்காமல் போவது அல்லது நமது உடல் உண்ணும் உணவிலிருந்து தேவையான விட்டமின் பி12ஐ கிரகித்துக் கொள்ள முடியாமல் போவதுதான். இது நிச்சயம் நமது உடலின் செயல்பாடுகளில் பெரியஅளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், விட்டமின் பி12 குறைபாடு உடலில் இருக்கிறது என்பதை அறிவது மிகவும் சவாலானது. இதனால் ஏற்படும் பல்வேறு உடல் குறைபாடுகளில் ரத்தசோகை என்பது மிகவும் தீவிரமானது. ரத்த சோகைதான் ஏற்பட வேண்டும் என்பது எந்த அவசியமும் இல்லை. மாறாக, பல்வேறு அறிகுறிகளையும் நமது உடல் வெளிப்படுத்தலாம். அதனை உடனடியாகக் கண்டறிந்து பரிசோதனை மூலம் உறுதி செய்து கொண்டு மருத்துவ சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

அதாவது, உடலில் பல்வேறு வேறுபாடுகள் தெரிந்தாலும், அவற்றை பி12 குறைபாட்டுடன் ஒப்பிடுவது கடினம். ஆனால் தலைமுடியில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு எளிதாகக் கண்டறியலாம்

விட்டமின் பி12 தான், சிவப்பு ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. விட்டமின் பி12 குறைந்தால், ஆக்ஸிஜன் கொண்டு செல்வது குறைந்து புதிய முடி வளர்வது குறையும். இப்போதுதான் முடி உதிர்வது குறைவாகவே இருந்தாலும் உங்கள் தலைமுடியின் அடர்த்தி குறையும். அதாவது குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வளர வேண்டிய புதிய முடிகள் வராமல் போவதன் எதிரொலி.

இளம் வயதில் நரை முடி பிரச்னை இருந்தால், அதுவும் விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். விட்டமின் பி12 குறைபாடு தொடர்பான ஆராய்ச்சிகளும், நரைமுடியும் விட்டமின் பி12 குறைபாட்டின் காரணிகளாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, தலைமுடி உதிர்வது, நரைமுடி போன்றவை வெறும் பிரச்னையாக மட்டும் இல்லாமல் விட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறது ஆய்வுகள்.

வெறுமனே தலைமுடி கொட்டுகிறதே என்று கவலைமட்டும் படுவதால் எதுவும் ஆகாது. இன்னமும் அதிகமாகக் கொட்டத்தான் செய்யும். எனவே தலைமுடி சொல்லும் ரகசியத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றம் செய்யுங்கள். பி12 அதிகம் இருக்கும் இறைச்சி மற்றும் பால் பொருள்களை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com