பெண்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் இதுதான் நடக்குமாம்! - ஆய்வுத் தகவல்

நல்ல தூக்கம் இல்லையென்றால் பெண்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நல்ல தூக்கம் இல்லையென்றால் பெண்களின் மனநலம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

தூக்கம்... அனைவருக்கும் முக்கியமானதுதான். ஒருநாள் சரியாக தூங்கவில்லை என்றாலும் சிலருக்கு வேலை ஓடாது. அந்த பட்டியலில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லலாம்! 

ஆம், நன்றாக ஆழ்ந்து தூங்கவில்லை என்றால் பெண்களின் மனநிலை பாதிக்கப்படுவதாக  வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

தூக்கத்தின் தரம் ஆண்களிடம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் பெண்களிடம் அவர்களின் மனநிலையை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2,200 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 2 வார கால ஆய்வு ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

'பெண்கள் இரவில் நன்றாகத் தூங்கினால் அவர்களின் மனநிலை நன்றாக இருக்கிறது. வேலை மற்றும் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள், அதுவே தூக்கம் மோசமாக இருந்தால், அதாவது சரியாக தூங்கவில்லை என்றால் எதிர்மறையான மனநிலை ஏற்படுகிறது. வேலை, பொறுப்பு, இலக்குகளில் கவனம் செலுத்துவது குறைகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே தூக்கம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் இந்த ஆய்வின் மூலமாக பெண்கள் தூக்கத்தில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com