நீங்கள் ரொம்ப கண்டிப்பான பெற்றோரா? நல்லதுக்கு இல்லைங்க!

எந்தக் குழந்தைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுகிறார்களோ அவர்களது டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றமானது,
ரொம்ப கண்டிப்பு நல்லதுக்கு இல்லைங்க!
ரொம்ப கண்டிப்பு நல்லதுக்கு இல்லைங்க!
Published on
Updated on
1 min read


லண்டன்: பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டால், அது குழந்தைகளின் உடல் அமைப்பானது டிஎன்ஏவை உணரும் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

எந்தக் குழந்தைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுகிறார்களோ அவர்களது டிஎன்ஏவில் ஏற்படும் மாற்றமானது, கடினமான இணைப்பை ஏற்படுத்தி, அவர்கள் இளமைக்காலத்தில் அல்லது வருங்காலத்தில் மன உளைச்சல் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் நடந்த மருத்துவக் கருத்தரங்கில், டாக்டர் எவலியன் வான் ஆஷ்சே தாக்கல் செய்த மருத்துவ ஆய்வறிக்கையில், குழந்தை வளர்ப்பின்போது கடுமையாக நடந்துகொள்வது, உடல் ரீதியான தண்டனை மற்றும் உளவியல்ரீதியாக துன்புறுத்துதல், டிஎன்ஏவில் சற்று கடின கோடாக மாறி, ஒரு மரபணு எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதற்கான கூடுதல் விஷயங்களையும் கண்டறிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் வளரும் குழந்தையை மனச்சோர்வுக்கு ஆளாக்கும் என்பதற்கான சில குறிப்புகளும் கிடைத்துள்ளன. அதேவேளையில், மிகவும் சுதந்திரமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக, சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட 12 வயது முதல் 16 வயது வரையிலான பிள்ளைகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.  இரு அணியிலும் ஒரே அளவிலான ஆண் பிள்ளைகள் இருந்தனர். 

இவர்களில், சுதந்திரமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகளைக் காட்டிலும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட பிள்ளைளுக்கு மனச்சோர்வு அல்லது மன உளைச்சல் ஆரம்ப நிலையில் இருந்ததும், சிலருக்கு மருத்துவ உதவித் தேவைப்படும் நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் என்றால் கண்டிப்புடன், குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து விலகி, நல்லது கெட்டது எதுவென்பதை குழந்தைகளே புரிந்து கொள்ளும் வகையில் அவர்களை வளர்த்து, அவர்களை வழிநடத்துவது மட்டுமே சிறந்த பெற்றோரின் கடமை.

கண்டிப்பு வேண்டாம்.. கவனம் வேண்டும்..
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com