பண்டிகை கால சருமப் பராமரிப்பு: இந்த 5 விஷயத்தை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வரவிருக்கின்ற இந்த சூழ்நிலையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வரவிருக்கின்ற இந்த சூழ்நிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். அதுபோல பண்டிகை காலங்களில் சருமப் பராமரிப்பும் மிக முக்கியமானது, அவசியமானதும்கூட. 

அந்தவகையில் பண்டிகை காலத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது குறித்துப் பார்க்கலாம். 

உணவுக் கட்டுப்பாடு

பண்டிகை என்றாலே அளவில்லாமல் சாப்பிடுவது, குறிப்பாக இனிப்புகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது வழக்கம்தான். பலரும் சாப்பிடும்போது அதனால் வரும் விளைவுகள் குறித்து யோசிப்பதில்லை. அதனால், விளைவுகள் கருதி பண்டிகை நேரத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். 

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவை வயிற்றுக்கோளாறுகளை மட்டுமின்றி சருமத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். முகப்பருக்கள் ஏற்படும் என்பதால் இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

தண்ணீர் குடித்தல்

கோடை அல்லது குளிர்காலம் எதுவாக இருந்தாலும் நீரேற்றம் அவசியம். குளிர்ச்சியான சூழ்நிலை உங்களை மிகவும் சோர்வாக உணர வைக்கும். இதற்கு உடலில் நீர்ச்சத்து குறைவதும் ஒரு காரணம். எனவே, குளிர்காலத்திலும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். உங்கள் உடலையும் சருமத்தையும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 

முகம் கழுவுதல் 

குளிர் காலத்தில் சருமம் வறண்டு இறந்த சரும செல்களை தங்கவைக்கும். இந்த நேரத்தில் இறந்த செல்களை நீக்க வேண்டியது அவசியம். இதற்காக தினமும் இருமுறை முகம் கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு சருமத்தை லேசாக மசாஜ் செய்தலே போதுமானது. இதனால் சருமம் பளபளக்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன்கள் கோடை காலத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்த வேண்டியது இது. ரசாயனம் குறைந்த சன்ஸ்கிரீன் க்ரீம்களை பயன்படுத்தலாம். 

மேக்கப் 

சருமத்தைப் பாதுகாக்க சாதாரண லேசான மேக்அப் போட வேண்டும். க்ளென்சர் கொண்டு முகம் கழுவியதும் மாஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். மேக்அப் செய்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

அதுபோல பண்டிகை முடிந்ததும் கண்டிப்பாக மேக்அப்பை கலைக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர் மேக்அப்பை கலைத்துவிட்டு சருமத்தை சுத்தப்படுத்திய பின்னர் தான் தூங்கச் செல்ல வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com