தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? 3 முக்கிய வழிகள் இதோ..!

வாழ்க்கையின் சிக்கலான சுழற்சியில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து விடுபட அடிப்படை அவசியமானது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் எந்தச் சுழலில் இருந்தும் தப்பித்துவிடலாம். 
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? 3 முக்கிய வழிகள் இதோ..!

வாழ்க்கையின் சிக்கலான சுழற்சியில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து விடுபட அடிப்படை அவசியமானது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை இருந்தால் எந்தச் சுழலில் இருந்தும் தப்பித்துவிடலாம். 

தன்னம்பிக்கையை வளர்க்க 3 வழிகள்! 

இன்றைய சூழ்நிலையில் பிறர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நீங்கள், உங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தவறிவிடுகிறீர்கள். உங்களை வளர்க்கக்கூடிய உங்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கக்கூடிய தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியம். ​தன்னம்பிக்கையை அதிகரிக்கும் 3 வழிகள் இதோ..! 

சுய பரிசோதனை

எந்தவொரு செயலிலும் சுய பரிசோதனை என்பது முக்கியமானது. உங்களை நீங்களே அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும். உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? எவ்வளவு இருக்கிறது? ஏன் இல்லை என்று ஆராய வேண்டும். தன்னம்பிக்கையை வளர்க்கத் தடையாக இருப்பது எதுவோ அதனை விட்டொழிக்க வேண்டும். உங்கள் தவறுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு அது மீண்டும் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே மெச்சிக்கொள்ள வேண்டும், உங்களை நீங்களே மணித்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்கள்தான் உயர்ந்தவர் என்பதை நம்ப வேண்டும். 

நட்புகள் 

தன்னம்பிக்கையை வளரக்கக்கூடிய நபர்களை உடன் வைத்திருங்கள். உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தைரியமாக அவர்கள் முடிவெடுக்க வைக்க உதவும். மேலும் பிரச்னைகள் நேரும்போது உங்களுக்கு நம்பிக்கையையும் தெளிவையும் அளிப்பார்கள். உங்களுடன் ஒத்துப்போகும் உறவுகளுடன் மட்டும் உங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். அனைவரிடமும் பகிர்ந்து அனைவரிடமும் கருத்து கேட்பது என்பது இயலாது. 

சுய முடிவு

ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. அப்படிதான் சிலர் உங்கள் நடவடிக்கைகளை, உங்கள் குணங்களை, உங்கள் முடிவுகளை விமர்சிக்கலாம், கொச்சைப்படுத்தலாம், தவறு என்றுகூட சொல்லலாம். ஆனால், உங்களை நீங்கள் நம்புங்கள், பிறரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால், இறுதியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வதே , அதன் வெற்றி, தோல்வியை அணுக உதவும். உங்களின் தனிப்பட்ட பிரச்னைகளில் நீங்கள் சுயமாக முடிவெடுக்க பழகிக்கொள்வது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

மேலும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் சிந்தித்தலும் அதில் இருந்து எளிதாக விடுபட உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com