உடல் எடையைக் குறைக்கும் 'முட்டை டயட்' பற்றி தெரியுமா?

உடல் எடையைக் குறைக்க முட்டை பெரிதும் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. காலை எழுந்ததும் 2-3 முட்டைகளை அவித்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான முழு சத்து கிடைப்பதுடன் காலை உணவாகவும் இருக்கிறது. 
உடல் எடையைக் குறைக்கும் 'முட்டை டயட்' பற்றி தெரியுமா?

முட்டை ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவு என்று சொல்லுமளவுக்கு  அதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12 ஆகிய வைட்டமின்களும், செலினியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.

ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன. ஒரு கிராமுக்கு குறைவாகவே கார்போஹைடிரேட் உள்ளதால் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த புரோட்டீன், அமினோ அமிலங்கள் உள்ள உணவு எனலாம். 

இதுவரை 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 11 அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்யும். எஞ்சிய 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே உடல் பெற முடியும் என்ற நிலையில் இந்த அத்தியாவசிய 9 அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே உணவுப்பொருள் 'முட்டை'தான். 

இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க முட்டை பெரிதும் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. காலை எழுந்ததும் 2-3 முட்டைகளை அவித்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான முழுச் சத்து கிடைப்பதுடன் காலை உணவும் முடிந்துவிடுகிறது. மேலும் அவ்வளவு சீக்கிரம் பசிக்காது என்பதால் உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு சேர்வது குறைகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. 

மூன்று வேளை உணவுகளில் ஏதாவது ஒரு வேளை முட்டையை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ளலாம். எனினும் காலை நேரம் சிறந்தது. 

முட்டையை மட்டும் தனியாக அவித்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிட வேண்டும். வேறு உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஒருவேளை முட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற இரு நேரங்களில் கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.  

முட்டை, உடலில் ஹெச்டிஎல் எனும் அமிலச் சுரப்பை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. 

சாதாரணமாக நாள் ஒன்றுக்கு மூன்று முட்டை வரை சாப்பிடலாம். எனினும், முட்டை அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தில்லை என்கின்றனர் நிபுணர்கள். 

தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது குறையும் என ஓர் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com