முகப்பரு முதல் சருமப் பொலிவு வரை... ஒரே தீர்வு 'கற்றாழை'!

கற்றாழை அழகுக்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் பல வகைகள் இருந்தாலும் சோற்றுக் கற்றாழை வகை சாப்பிடுவதற்கும் அழகுக்கும் அதிகம் பயன்படுகிறது. 
முகப்பரு முதல் சருமப் பொலிவு வரை... ஒரே தீர்வு 'கற்றாழை'!

கற்றாழை அழகுக்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழையில் பல வகைகள் இருந்தாலும் சோற்றுக் கற்றாழை வகை சாப்பிடுவதற்கும் அழகுக்கும் அதிகம் பயன்படுகிறது. 

கற்றாழை சிறந்த மாய்ஸ்சரைசராக இருக்கிறது. இதில் உள்ள ஜெல்லை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் அழகாகும். 

இதில் உள்ள புரதங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கிருமி நாசினியாக செயல்படுகிறது. பூச்சி கடித்தல் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. 

முகப்பரு வராமல் தடுக்கிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வடுக்களை படிப்படியாக மறைக்கிறது. ஏனெனில் கற்றாழை தோலில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. 

உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. கற்றாழை 100 சதவீதம் இயற்கையானது என்பதால் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. 

தலைமுடி வளர கற்றாழை மிகவும் பயன்படும். நன்றாக தூக்கமும் வரும். 

தோல் சுருக்கத்தைக் குறைத்து மிகவும் வயது முதிர்வு தோற்றத்தைத் தடுக்கிறது. 

கற்றாழை சாறு குடித்துவர உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். மேலும், உடல் சூடு தணியும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும். வயிற்றுக்கோளாறுகள் சரியாகும். 

கற்றாழை சாறை அப்படியே பயன்படுத்தக்கூடாது. சருமத்திற்கு என்றாலும் சரி கற்றாழை ஜெல்லை குறைந்தது 6-7 முறை நன்றாகக் கழுவிவிட்டு பயன்படுத்த வேண்டும். 

சிலர் கற்றாழையை அப்படியே பயன்படுத்தினால்தான் சருமத்தில் அரிப்பு, அழற்சி ஏற்படும். கற்றாழை ஜெல்லை அதன் கசப்புத் தன்மை போகும்வரை நன்றாகக் கழுவிவிட்டு பயன்படுத்தினால் பிரச்னை இல்லை.

எனினும், கற்றாழையை சிறு பகுதியில் போட்டு ஏதேனும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று பார்த்துவிட்டு பயன்படுத்தவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com