பெண்கள் குண்டாக இருக்க இதுதான் காரணம்!

வாழ்க்கைமுறை வேகமாக மாறி வரும் சூழ்நிலையில் உடலியல் சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதில் உடல் பருமன் என்பது முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. 
பெண்கள் குண்டாக இருக்க இதுதான் காரணம்!

வாழ்க்கை முறை வேகமாக மாறி வரும் சூழ்நிலையில் உடலியல் சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதில் உடல் பருமன் என்பது முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. 

உலகில் 150 கோடிக்கும் அதிகமானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 30 கோடி பேர் பெண்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு 2014 இல் அறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கும் இன்று உடல் பருமன் மிக சாதாரணமாக இருக்கிறது. 

உடல் பருமனால் தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பல வகையான புற்றுநோய்கள், இதய நோய், பக்கவாதம், கருவுறுதலில் பிரச்னை ஏற்படலாம்.

இந்நிலையில் பெண்களுக்கு உடல் பருமன் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  

1. உடல் பருமனுக்கு முதன்மைக் காரணம் உடல் இயக்கமின்மை. துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வதுடன் உடற்பயிற்சி செய்ய முற்படாததால் உடலில் கொழுப்பு படிகிறது. உடல் இயக்கமின்மையால் உடல் பருமன் ஏற்பட வழிவகுக்குகிறது. 

2. அதிகப்படியான மது அருந்துதல், சர்க்கரை மிகுந்த பானங்கள் அருந்துதல் ஆகியவை உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. 

3. மரபு சார்ந்தும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் பருமனான பெற்றோரின் குழந்தைகளுக்கு ஏற்படலாம். இவ்வாறாக இருப்பின் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். 

4. உடலின் மொத்த இயக்கங்களுக்கும் ஹார்மோன்கள் முக்கியமானவை. அந்தவகையில் அதிக பசியைத் தூண்டும் ஹார்மோன்களால் அதிகம் உணவு எடுத்துக்கொள்ளும்போது உடல் பருமன் ஏற்படுகிறது.அதுபோல , மன அழுத்தம், இரவில் தூக்கமின்மை போன்ற பொதுவாக காணப்படும் பிரச்னைகளால் உடல் எடை கூடும். 

5. ஸ்டீராய்டுகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், நீரிழிவு மருந்துகள் போன்றவையும் உடல் எடை அதிகரிக்க காரணமாகும். எனவே இந்த மருந்துகளை எடுப்பதற்கு முன்பாக மருத்துவரிடம்  கூடுதலாக ஒருமுறை ஆலோசனை பெறுவது நல்லது. 

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவைக் குறைக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த இரண்டும் உடல் எடையைக் குறைக்க அவசியம்.  இதுதவிர, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com