டாப் 10 இந்திய உணவுகள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட்டில் பிரியாணி இருக்கிறதா?

இந்தியாவில் முதல் 10 இடங்களில் உள்ள உணவுகள் என்னென்ன? பார்க்கலாம்..
டாப் 10 இந்திய உணவுகள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட்டில் பிரியாணி இருக்கிறதா?

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுக்கு என்றுமே முதலிடம்தான். தரமாக ருசியாகக் கிடைக்கும் உணவுகளைத் தேடித் தேடிச் சாப்பிடும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலாசாரத்தினால் வெவ்வேறு வகையான உணவுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கென பிரபலமான உணவுகள் இருக்கின்றன. 

ஆன்லைன் பயண வழிகாட்டியான 'டேஸ்ட் அட்லஸ்' இந்தியாவில் பிரபலமான 100 உணவுகளை பட்டியலிட்டுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் உள்ள உணவுகள் என்னென்ன? பார்க்கலாம்..

1. ரொட்டி 

தென்னிந்தியாவில் அரிசியைப் போல வட மாநில மக்கள் ரொட்டி அதிகம் சாப்பிடுகின்றனர். முதலில் பெர்சியா மக்களிடம் அறிமுகமானது என்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.  

2. நான்(Naan)

இதுவும் ரொட்டி வகைகளில் ஒன்று. ரொட்டியை அப்படியே அடுப்பில் சுட்டால் 'நான்' கிடைக்கும். கி.பி.1300ல் இந்தோ-பாரசீக கவிஞரான அமீர் குஷ்ராவின் குறிப்புகளில்  'நான்' முதலில் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. தில்லி இம்பீரியல் கோர்ட்டில் முதலில் அறிமுகமானது. 

3. சட்னி 

தந்தூரி சிக்கன் அல்லது ஆலு பரோட்டா சாப்பிடும்போது இந்த சட்னி இல்லாமல் முடியாது. சில காய்கறிகள், பழங்களை சிறிதாக நறுக்கி அத்துடன் சிறிது இனிப்பு, மஞ்சள், இஞ்சி, பட்டை, கிராம்பு கலந்து தயாராவது. தென்னிந்தியாவில் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் சட்னி அல்ல. 

4. பிரியாணி 

நாடு முழுவதும் பிரபலமான ஒரு உணவு என்று கூறலாம். 1600களில் முகலாயர்கள் இதனை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாசுமதி அரிசி கொண்டு முட்டை, இறைச்சி, காய்கறிகள் இவற்றில் ஏதேனும் ஒன்று சமைக்கப்படுகிறது. 

5. பருப்பு 

புரோட்டீன் நிறைந்த பருப்பு பெரும்பாலான மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள். தென்னிந்தியாவில் அரிசி சாதத்திற்கும் வட மாநிலங்களில் சப்பாத்தி, பாராட்டிற்கும் இணை உணவாக உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடியது. நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

6. தந்தூரி 

சிக்கனை அடுப்புக்கரி கொண்டு சூடாக்கும்போது கிடைக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் ரொட்டியை சூடாக்கும் முறையில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். 

7. தாலி அல்லது மீல்ஸ் 

இந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்று எனலாம். அரிசி சாதம், குழம்பு வகைகள், காய்கறி, அப்பளம், இனிப்பு என 10க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கும். சைவ மற்றும் அசைவம் என இரு வகைகளிலும் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. ஆசிய மற்றும் கரீபியன் நாடுகளின் சில பகுதிகளில் முதலில் அறிமுகமானது. 

8. பட்டர் சிக்கன் 

1950களில் தில்லியில் குந்தன் லால் குஜ்ரால் என்பவர் தனது உணவகத்தில் சிக்கனை வெண்ணெய் மற்றும் தக்காளி கொண்டு தயாரித்து வழங்கியதே பின்னர் பட்டர் சிக்கன் என்று பிரபலமாகியுள்ளது. 

9. குருமா

சைவம், அசைவம் என இரு வகைகளிலும் தயாரிக்கப்படுகிறது. 1500களில் மன்னர் அக்பர் அரண்மனை சமையலறையில் முதலில் அறிமுகமானதாக அறியப்படுகிறது. பெர்சியா மற்றும் இந்திய சமையல் முறையின் கலவை. மேற்கு இந்தியாவின் ராஜபுத்திரர்களின் பழங்குடியினரின் பெயரே இதுவாகும். 

சப்பாத்தி, பரோட்டா, 'நான்' உள்ளிட்ட உணவுகளுக்கு இணை உணவாக அளிக்கப்படுகிறது. 

10. டிக்கா 

எலும்பில்லாத இறைச்சி குறிப்பாக சிக்கனில் தயாரிக்கப்படுகிறது. இதுவும் அடுப்புக்கரியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் கொண்டு சமைக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com