காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காஃபியில் அதிகமுள்ள காஃபினால் புத்துணர்ச்சி கூடும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் காஃபி அதிகம் குடிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும், ஆயுளைக் குறைக்கும் என்று எதிர்மறையாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காஃபி குடிப்பதால் சருமத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
காஃபி குடிப்பதை சரும பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!!

காஃபி குடிப்பதை நிறுத்தினால்...
♦ காஃபி ஒரு டையூரிடிக். அது சிறுநீரை அதிகம் வெளியேற்றும், இதனால் உடல் நீரிழப்பு ஏற்படும். சருமத்தை வறண்டு போகச் செய்யும். எனவே, காஃபியை நிறுத்தினால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.
♦ காஃபி குடிப்பதை நிறுத்தினால் சருமம் சிவந்து போதலைத் தடுக்க முடியும்.
♦ கண்களில் கருவளையங்களைக் குறைக்கும், தூக்கம் மேம்படும்.
♦ சருமத்தில் முகப்பருக்களைக் குறைக்கும்.
♦ இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். எனவே இளமையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காஃபி குடிப்பதை விட்டுவிடலாம்.
♦ சருமத்தில் அரிப்பு மற்றும் ஒவ்வாமையைத் தடுக்கும்.
♦ சருமத்தில் ஏற்படும் எண்ணெய் உருவாக்கத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
♦ ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
♦ சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து சருமம் பளபளக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



