நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த தகவல்

கடந்த சில நாள்களாக தனது காலை உணவாக பழைய சோறு மாறிவிட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த தகவல்
நோய்க்கு மருந்தாக மாறிய பழைய சோறு.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த தகவல்

கடந்த சில நாள்களாக தனது காலை உணவாக பழைய சோறு மாறிவிட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எரிச்சலுடன் குடல் பிரச்னை என்ற ஐபிஎஸ் நோயால் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அந்நோய்க்கு எளிதான மருந்தாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு இந்நோய் பாதிப்பு இருந்ததாகவும், பழைய சோறு எனும் மாமருந்தால் நோய் குணமானதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இந்த பதிவு உதவலாம் என்று பகிர்ந்திருப்பதகாவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், சில ஆண்டுகாலமாக எனது காலை உணவாக பழைய சோறு மாறியிருக்கிறது. எனது பாம்பரிய முறையில் இந்த உணவை நான் எடுத்துக் கொண்டுள்ளேன். எனக்கு பல காலணமாக எரிச்சலுடன் குடல் பிரச்னை (இர்ரிடபிள் பவுள் சின்ட்ரோம் -ஐபிஎஸ்) நோய் இருந்தது.  ஆனால் அந்த நோய் தற்போது குணமடைந்துவிட்டது. பல ஒவ்வாமைகளும் இருந்தன. அவைகளும் இல்லை. ஒருவேளை இந்த பதிவு சிலருக்கு உதவலாம் என்று பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பலரும், தங்களுக்கும் இந்த நோய் இருப்பதாகவும், இந்த பதிவு உதவும் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளனர். சிலர், பழைய சோறு எப்படி செய்வது என்று டிப்ஸ் கேட்டுள்ளனர்.  சிலர் பழைய சோறு எப்படி செய்வது என்பது குறித்த விடியோக்களை இணைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சோஹோ நிறுவனத் தலைவருமான ஸ்ரீதர் வேம்பு, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்திய பணக்காரர்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்.

உயர்கல்வி பெறாத கிராமப்புற மாணவர்களுக்காக தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டுக் கல்விக்காக சோஹோ பள்ளிகளை நிறுவியவர் ஸ்ரீதர் வேம்பு. இவருடைய சோஹோ மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் கல்லூரிகளில் பட்டம் பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் என்பது, வயிற்றின் குடல் பகுதியில் ஏற்பட்டும் அசௌகரியம். சிலருக்கு பதற்றம், கோபம், மன அழுத்தம் போன்றவை ஏற்பட்டதும் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், மந்தநிலை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சாப்பிட்டதும் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும். 

மனநிலை காரணமாகவே இந்த பிரச்னை ஏற்படுகிறது என்பதால், இது ஒரு நோயே அல்ல என்று விட்டுவிட முடியாது. தேர்வெழுத, நேர்காணலுக்கு செல்லும் போதுகூட இந்த பிரச்னை ஏற்படலாம். இது ஏன், யாருக்கு ஏற்படும் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சிலர் எப்போதும் ஏதோ ஒரு விஷயத்துக்குத் தொடர்ந்து பயந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு இது வரலாம். எந்த வயதினருக்கும் இந்தப் பிரச்னை வரக்கூடும். இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்றே கூறப்படுகிறது.

சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் தொடர்கதையாகிவிடுகிறது. இதந்த பிரச்னையால் பலரும் வெளியே செல்லவே பயப்படுவார்கள். இந்த நிலையில்தான், பழைய சோறு இந்த நோய்க்கு மாமருந்தாக உள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com