தூக்கம் வரவில்லையா...இதை சாப்பிடுங்க...!

ரோஜாப் பூ குல்கந்துவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. 
தூக்கம் வரவில்லையா...இதை சாப்பிடுங்க...!
Published on
Updated on
1 min read

'ரோஜாப் பூ குல்கந்து' பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ரோஜாப் பூ குல்கந்து இனிப்பாக, நல்ல வாசனையுடன் கூடியதாக இருக்கும். சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை குல்கந்தை விரும்பிப் சாப்பிடுவார்கள்.

இந்த ரோஜாப்பூ குல்கந்து தயாரிப்பதற்கு முதலில் தேவைப்படுவது ரோஜாப்பூவின் இதழ்களேயாகும். எனவே நன்றாக மலர்ந்த, அழகிய பெரும் இதழ்களையுடைய பன்னீர் ரோஜா பூக்களாகப் பார்த்து தேவையான அளவு வாங்கிவர வேண்டும்.

வாங்கி வந்த பூக்களை அதிலுள்ள இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து தேனில் ஊறவைத்து எடுத்தால் குல்கந்து ரெடி.

ரோஜாப் பூ குல்கந்துவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. 

* வாய் புண்களுக்கு சிகிச்சையளிக்க

அதிக உடல் சூடு உள்ளவர்கள், அடிக்கடி வாய் புண்களால் பாதிக்கப்படுகின்றனர். குல்கந்து உடலுக்கு குளிர்ச்சியை அளித்து வாய் புண் பாதிப்பை போக்குகிறது.

* நெஞ்செரிச்சலை குணப்படுத்த

குல்கந்து தொண்டையில் எரியும் உணர்வை போக்குகிறது. தொண்டைப் புண், அஜீரணம் மற்றும் வயிற்று வலியைப் போக்க உதவுகிறது. 

* ரத்தத்தை சுத்திகரிக்க

குல்கந்துவில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பின் காரணமாக, உடலில் இருந்து நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றது.

* மூக்கில் ரத்தம் வராமல் தடுக்க

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக மூக்கில் ரத்தம் வருவது வழக்கம். குல்கந்துவை பாலில் சேர்த்து சாப்பிடும் போது உடல் குளர்ச்சியடைந்து மூக்கில் ரத்தம் வராமல் குல்கந்து தடுக்கிறது.

* தூக்கத்தைப் பெற

தூங்குவதில் சிரமம் இருந்தால் குல்கந்துவை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது ஒரு இயற்கையான குளிரூட்டியாகும். இது உங்கள் மனதையும், உடலையும் அமைதியாக வைத்திருந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அதிக சர்க்கரை உள்ளது. 

குல்கந்துவில் அதிக நன்மைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு அளவாக குல்கந்துவை சாப்பிடுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com