பெங்களூரு: உலகம் முழுவதும் பலரையும் தாக்கும் ஒரு நோய்தான் சிறுநீரகத்தில் கல் பிரச்னை. சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக் குழாய்களிலோ கல் உருவாகும் போது அது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் ஏற்பட்டதை உறுதி சய்ய பொதுவாக பல அறிகுறிகள் உள்ளன. கீழ் முதுகு, பைக்கவாட்டில் கடுமையான வலி, இடுப்புப் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.
இதையும் படிக்க.. சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணி: கைவிடப்படும் 6 ரயில் நிலையங்கள்
பலருக்கும் இதனை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதற்கான அறிகுறிகள்..
வலி
இடுப்பு மற்றும் பக்கவாட்டில் கடுமையான வலி ஏற்படும். அவ்வப்போது குத்துவதுபோல ஒரு கடுகடுப்பு வலி வந்து வந்து போவது ஆரம்ப அறிகுறி. இந்த வலியும் அதிகரித்து, வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும்போது நோய் தீவிரமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிறுநீர் பிரச்னை
சிறுநீரகக் கல் இருந்தால், சிறுநீர் நிறம் மாறும். சிலருக்கு துர்நாற்றம் வீசக்கூடும். அவ்வப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
நிலைமை தீவிரமடையும்போது சிறுநீரில் ரத்தம் கலந்து வரும்.
குளிர் காய்ச்சல்
சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பவர்களுக்கு அவ்வப்போது சிறுநீரகத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, குளிர் காய்ச்சல் ஏற்படக் கூடும். குளிர் காய்ச்சல் ஏற்பட்டு, இடுப்புப் பகுதியில் வலியும் இருந்தால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
குமட்டல் மற்றும் வாந்தி
இதுபோலவே, இடுப்புப் பகுதியில் வலி இருந்து வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால், சிறுநீரகக் கல் உருவானதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
அடிவயிற்றில் வலி
சிறுநீரகக் கல் உருவானால், அடிவயற்றில் வலி ஏற்படும். அடிவயிற்று வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், சிறுநீரகக் கல் உருவாகி அது சிலருக்கு சிறுநீரகக் குழாயில் சிக்கிக் கொள்ளும்போது அடிவயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.
சிறுநீர் கழிக்கும்போது வலி
சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான வலி ஏற்படும். சிலருக்கு எரிச்சல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
இந்த அனைத்துமே இருந்தால் நிச்சயம் மருத்துவரை நாட வேண்டும்.
சிகிச்சை முறைகள்...
வலி நிவாரணிகள்
சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கு முதலில் வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு வலி நிவாரண மருந்துகள் அளிக்கப்படும். சிலருக்கு சுடுநீர் ஒத்தடம் அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
அதிகப்படியான நீர் அருந்துதல்
சிறுநீரகக் கல் பிரச்னை இருப்பவர்கள் அதிகப்படியான நீர் அருந்த அறிவுறுத்தப்படுவார்கள். அதிகமாக தண்ணீர் அருந்துவதால் சிறுநீரகக் கல் குழாய்களில் இருந்தால் அது வெளியேறிவிடும். புதிதாக கல் உருவாவது தவிர்க்கப்படும். பொதுவாக தண்ணீர் அருந்தாலும் அல்லது எலுமிச்சை சாறு, இளநீரும் அருந்தலாம்.
யூரிடெரோஸ்கோபி
இந்த சிகிச்சை முறையில் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சையின்றி துளை மூலம் உடைத்து அகற்றப்படும். 2 செ.மீ.க்கும் பெரிய அளவுள்ள சிறுநீரகக் கற்களை இப்படி அகற்றலாம்.
இரண்டு செ.மீ.க்கும் சிறிய அளவுள்ள கற்களை அதிர்வலைகள் மூலம் உடைத்து சிறுசிறு துகளாக மாற்றி வெளியேற்றும் முறை உள்ளது.
அறுவைசிகிச்சை
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, மிகவும் அரிதாகவே அறுவைசிகிச்சை செய்து சிறுநீரகக் கற்கள் அகற்றப்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலோ அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கல் அகற்றப்படும்.
எச்சரிக்கை...
ஒருவேளை ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்னை உருவாகி, அகற்றப்பட்டாலும் கூட, மீண்டும் அவர்களுக்கு கல் உருவாகும் அபாயம் உள்ளது. புதிதாக சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்க, ஆரோக்கியமான வாழ்முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான தண்ணீர் அருந்த வேண்டும். உப்பு மற்றும் இறைச்சியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

