உடல் எடையைக் குறைக்க எளிய வழி இதுதான்!

உடல் எடையைக் குறைக்க பலரும் போராடும் இந்த  நேரத்தில் உடல் பருமனைக் குறைக்கும் ஒரே எளிய வழி இதுதான் ! 
உடல் எடையைக் குறைக்க எளிய வழி இதுதான்!

உடல் எடையைக் குறைக்க பலரும் போராடும் இந்த  நேரத்தில் உடல் பருமனைக் குறைக்கும் ஒரே எளிய வழி இதுதான் ! 

வேறு ஒன்றுமில்லை. தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்..! 

கோடைகாலம் வந்தாலே அதிக வியர்வை வெளியேறும், இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்கும். இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமாகவே தண்ணீர் குடிப்பது சாதாரணமான ஒன்றுதான். 

ஆனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

♦ தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதற்கு அதிகமாக எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். 

♦ அதிலும் காலையில் எழுந்தவுடன் (அரை லிட்டர்  அல்லது முடிந்தளவு) தண்ணீர் குடிக்கும்போது உடலில் கெட்ட நீர் வெளியேறும், கெட்ட கழிவுகள் மலம் அல்லது சிறுநீர் வழியாக வெளியேறும். மேலும் சருமம் பொலிவு பெறும். 

♦ தண்ணீரில் கலோரி எதுவும் இல்லை. மேலும் இது கொழுப்புகளை கரைக்கிறது. 

♦ சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் உணவைக் குறைக்கும். 

♦ திட உணவுப் பொருள்களைவிட எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள், இளநீர், பதநீர் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள் ஆகியவற்றை அதிகம் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த பழங்களைச் சாப்பிடலாம்.

♦ இத்துடன் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள், லேசான உடற்பயிற்சி மூலமாக எளிதாக உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். 

♦ முடிந்தவரை குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிருங்கள். வெதுவெதுப்பான அல்லது கொதிக்க வைத்து ஆறிய நீரை அருந்தலாம். 

♦ தலைவலி, கவனச்சிதறல், மோசமான மனநிலை, பசி இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இருக்கலாம். எனவே அந்த நேரத்தில் தண்ணீர் குடியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com