தினமும் ராத்திரி ஒரே நேரத்தில் தூக்கம் கலைய இப்படி ஒரு காரணமா?

மணி 3 என அதில் இருக்கிறது. கைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர முயற்சிக்கிறோம் அல்லது தூங்குகிறோம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


ஒரு நாள் இரவு நள்ளிரவில் தூக்கம் கலைந்து விழிக்கிறோம். கைப்பேசியை எடுத்து நேரம் பார்க்கிறோம். மணி 3 என அதில் இருக்கிறது. கைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர முயற்சிக்கிறோம் அல்லது தூங்குகிறோம்.

ஆழ்ந்த உறக்கம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நள்ளிரவில் விழித்து உறக்கம் வராமல் தவிப்பதே மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது.

ஆனால், உறக்கம் வராமல் தவிப்பது குறித்து முதலில் கவலைப்படாமல் இருப்பதுதான் நிலைமையை மேம்படுத்த உதவும். நமது உடலுக்கு உறக்கம் என்பது ஓய்வு கொடுக்கிறது. அவ்வாறு உறக்கம் வராமல் சற்று ஓய்வாக இருப்பதும் கூட உடலுக்கு போதுமானதாக இருக்கலாம் என்று நம்மை நாம் ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம்.

முதலில், தூக்கம் வரவில்லை என்று கவலைப்படக் கூடாது. நடுவில் தூக்கம் கலைகிறதே என்றும் கவலைப்படக் கூடாது. முதலில் நாம் எப்படி, எத்தனை மணிக்கு தூங்கச் செல்கிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் என்பதை கணக்கெடுங்கள். நடுவில் எத்தனை முறை தூக்கம் கலைகிறது என்பதையும் கணக்கெடுங்கள்.

அப்போது, மனிதர்கள் உறங்கும் போது அவ்வப்போது உறக்கம் கலைவது என்பது ஏதோ வியாதியெல்லாம் இல்லை என்பதையும், இயல்பாகவே மனிதர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்திலும் நடு நடுவே உறக்கம் கலையும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, ஒரு இயல்பான மனிதனுக்கு நள்ளிரவில் நான்கு அல்லது 6 முறை தூக்கம் கலைகிறது என்கிறது ஆய்வுகள். பெரும்பாலும் யார் ஒருவரும் ஒருசேர தூங்கி எழுந்திருப்பது இல்லையாம். இதற்கு காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகளோ குகை மனிதர்களைக் காரணம் சொல்கிறார்கள். குகை மனிதர்கள் காலத்தில் மனிதர்கள் உறங்கும் போது அச்சத்துடனே இருப்பார்கள், அவ்வப்போது பலரும் எழுந்து அருகே ஏதேனும் விலங்குகள் அருகில் இருக்கிறதா என்பதைப் பார்த்து இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு மீண்டும் உறங்கச் செல்வார்கள். 

எனவே, இதே வழியில் வந்த மனிதர்களுக்கு இன்றுவரை அந்த விழிப்புநிலை தொடர்கிறது என்கிறார்கள்.

ஒரு சில நொடிகளில் உறக்கம் கலைந்து, மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிடுவோம். சிலருக்கு நடுவில் விழிப்பு வந்தது கூட நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு சிறிய விழிப்புநிலையாக இருக்கலாம்.

ஒருவேளை மீண்டும் உறக்கம் வராமல் போனால்தான் சற்று ஆராய வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை முறை அல்லது எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறோம் வேண்டுமானால் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.  

அப்படி இது கவலைதரும் விஷயமாக இருந்தால் அதற்கு உங்கள் மனநிலை காரணமா? ஏதேனும் பிரச்னை குறித்து அடிக்கடி சிந்திக்கிறீர்களா? அப்படி மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் தானாகவே உங்கள் உடலானது ஃபிளைட் அல்லது ஃபைட் மோடுக்குச் சென்றுவிடும். அதனால் இயல்பான நடவடிக்கைகள் எதுவும் நடக்காது.

எனவே, மனக்கவலையை முதலில் விரட்டுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில்லாமல் அதிக நேரம் மானிட்டர் பார்ப்பது, உறங்கும் அறைக்குள் வெளிச்சம் அல்லது சப்தம் போன்றவை உங்கள் உறக்கத்தை கெடுக்கும் ஆயுதங்களா என்று சோதியுங்கள்.

தியானம், யோகா, தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வது போன்றவற்றை பின்பற்றலாம். கைப்பேசியை ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஒதுக்கிவிட்டு புத்தகம் படிக்க துவங்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com