பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன. பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது. தவிர வைட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் சத்துகள் உள்ளன.
♦ மாதவிடாய் பிரச்னை, வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
♦ சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல்லை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உண்டு.
♦ எலும்பு வளர்ச்சி, நரம்பு பலப்படுதல், பல் உறுதி ஆகியவற்றுக்கு உதவும்.
♦மேலும் மலச்சிக்கலை நீக்கும், செரிமானத்திற்கும் உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும்.
இதையும் படிக்க | ஹெட்ஃபோன் போடாதீங்க..!!
இவ்வாறு உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளுடன் சரும ஆரோக்கியத்திற்கும் பப்பாளி பெரிதும் பயன்படுகிறது.
♦ பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இறந்த செல்கள் நீங்கிய பிறகு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
♦ கரும்புள்ளிகளை அகற்றுதல், சருமத்தில் தொற்று, சிவப்பாக இருத்தல் உள்ளிட்டவை சரியாகும்.
♦ சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்கும்.
♦ தோல் பிரச்னைகளுக்கு காரணமான சருமம் சேதமடைவதைத் தடுக்கும், சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும்.
♦ பப்பாளியில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட், சரும சுருக்கங்களைக் குறைத்து முதுமையைத் தடுக்கிறது.
♦ சருமத்தை மென்மையாக்கவும், நீரேற்றம் செய்யவும் மிகச்சிறந்த பொருள் பப்பாளி.
♦ பப்பாளி சாப்பிடுவதுடன் சருமப் பிரச்னை உள்ளவர்கள் பப்பாளி சாற்றை முகத்தில் தொடர்ந்து அப்ளை செய்துவர விரைவில் மாற்றம் தெரியும்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்கும் டயட் உணவுகள் என்னென்ன?