நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எளிய கைவைத்தியம்!

முந்தைய காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டிலேயே செய்த கைவைத்தியங்கள்.

News image

கைவைத்தியம்

Updated On :21 ஜூன் 2024, 12:12 pm
Updated On :21 ஜூன் 2024, 12:12 pm

சிறு சிறு உடல் நலக் கோளாறுகளுக்கு எல்லாம் மருத்துவர்களை நாடாமல் வீட்டிலேயே கைவைத்தியம் மூலம் குணப்படுத்திக்கொள்ளும் முறையை நம் முன்னோர்கள் பல காலமாக பின்பற்றி வந்தனர். அவற்றில் சில..

1மூக்கடைப்பு

மஞ்சள் குலைகள்

மஞ்சள் குலைகள்

விரலி மஞ்சளின் நுனியை நெருப்பில் வாட்டி, வெளிவரும் புகையினை நுகருவதன் மூலம் மூக்கடைப்பிலிருந்து விடுபடலாம். 

2அஜீரணத்துக்கு

அச்சு வெல்லம்

அச்சு வெல்லம்

தலா 100கிராம் சுக்கு மற்றும் வெல்லத்தினை நன்கு பொடித்து, ஒன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, தினம் ஒரு உருண்டை சாப்பிட்டால் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் கட்டுப்படும்.

3தலைவலி

நறுமணப் பொருளான மிளகு (கோப்புப் படம்)

நறுமணப் பொருளான மிளகு (கோப்புப் படம்)

பத்துமிளகுடன் உப்பு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தாங்க முடியாத தலைவலி சட்டென பறந்துவிடும்.

4ஈறுகளில் ரத்தக் கசிவு

பல் சுத்தம்

பல் சுத்தம்

உப்பு, கடுக்காய், சீரகம் மூன்றையும் பொடித்து, அப்பொடியில் பல்துலக்கி வர ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.